← Back to list
8 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள்!
May 28, 2021
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 290ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து, இதுவரை பதிவான தொற்று சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 49 ஆயிரத்து 514ஆக உயர்ந்துள்ளது.
மிக அதிகமான கொரோனா சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் நீடிக்கின்றது.
சிலாங்கூரில் மட்டும் இன்று ஈராயிரத்து 52 கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கடுத்த நிலையில் Kelantan, KL, ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இன்று 61 பேர் அத்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி மையம் மாற்றப்படுகிறது!
Menjalara சமூக மையத்திலும், Tititiwangsa அரங்கிலும் மே 31ஆம் தேதி தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறவிருந்த COVID-19 தடுப்பூசி போடும் இயக்கம் இடம் மாற்றப்படுகிறது.
அம்மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளவர்களுக்கு, KLலிலுள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையம் MITECகில் தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தேதிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு கிடைத்துள்ளவர்கள், மேற்கொண்டு தகவல்களை MySejahtera செயலி வாயிலாக சரிப்பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாமன்னர் அதிகாரப்பூர்வ பிறந்தநாள்: அனைத்து நிகழ்ச்சி!
அடுத்த மாதம் மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக Istana Negara அறிவித்துள்ளது.
நாட்டில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அது பொய்த் தகவல்!
சுகாதார தலமை இயக்குநர் பொறுப்பில் இருந்து Tan Sri Dr Noor Hisham Abdullah விலகியிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது!
எனவே அந்த பொய்த் தகவலை யாரும் பகிர வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Kelana Jaya LRT பாதை வழக்க நிலைக்கு திரும்பியது!
Kelana Jaya LRT பாதைக்கான சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.
இவ்வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்த LRT விபத்தை அடுத்து, தண்டவாளத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பழுதுப் பார்ப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாக போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Wee Ka Siong தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான SOPகளுக்கு உட்பட்டு, அனைத்து 58 இலகு ரயில்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather