Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி போட்டனர்!

May 28, 2021


 

நேற்று ஒரு லட்சம் பேர் தடுப்பூசு போட்டனர்!

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு லட்சத்து ஏழாயிரம் பேரில், 58 ஆயிரம் பேருக்கு முதல் டோசும், ஏனையோருக்கு இரண்டாம் டோசும் போடப்பட்டதாக தடுப்பூசி போடுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் மக்கள் தொகையில் 3.1 விழுக்காட்டினர் கொரோனா தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.

அது மிகக் குறைவே என்றாலும், கடந்த புதன்கிழமை AStraZeneca வகை தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பதிவு தொடங்கியிருப்பதை அடுத்து, அவ்வெண்ணிக்கை கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர், பினாங்கு, சரவாக் Kuching மற்றும் Miri ஆகிய இடங்களை மையப்படுத்திய அந்த இரண்டாம் கட்ட பதிவில் 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு பதிவிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

----- 

அரசு மருத்துவமனைகளில் கோவிட் 19 நோயாளிகளுக்கான படுக்கை பயன்பாடு 75 விழுக்காட்டை எட்டியிருக்கின்றது.

ஜொகூர், திரங்காணு, கிளாந்தான், சரவாக், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகியவற்றிலுள்ள மருத்துவமனைகளின் கட்டில்கள் நிறைந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து சாதாரண வார்ட்டுகள் சில, கோவிட் 19 நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவு ICU-விலும் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Dr Adham Baba குறிப்பிட்டார்.

-----

காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே வணிகத் தளங்கள் செயல்பட முடியும் என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினால் தங்களின் வியாபாரம் 80 முதல் 90 விழுக்காடு சரிந்து விட்டதாக, மலேசிய முஸ்லீம் உணவக நடத்துனர்கள் சங்கம் PRESMA வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்நிலையை சரி கட்ட ஏதுவாக, உணவகங்களுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டை தளர்த்துமாறு PRESMA அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.

காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை செயல்பட தங்களுக்கு அனுமதி வழங்குமாறு அச்சங்கம் அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

------ 

கொரோனா வைரஸ் முதலில் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிய ஆழமான விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் Joe Biden உத்தரவிட்டதை அடுத்து, சீனா அதிருப்தி அடைந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் அப்பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒற்றுமையை குலைக்கும் என சீனா சாடியிருக்கிறது.

சீனாவின் Wuhan மாகாணத்தில் உள்ள அறிவியல் ஆய்வுக் கூடமொன்றில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியிருக்க வேண்டும் என அமெரிக்க புலனாய்வுத் துறை தகவல் வெளியிட்டதை அடுத்து, கொரோனா வைரஸ் மூலத்தை கண்டறிய Biden முன்னதாக உத்தரவிட்டார்.

இதனால் ஏற்கனவே சுமூகமில்லாமல் இருக்கும்  இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் பதற்றமடைந்திருக்கிறது.

2019-ஆம் ஆண்டு Wuhan நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது; பிறகு Wuhan ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், இது குறித்து உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு ஆய்வு நடத்தியதில், Wuhan ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather