← Back to list
இரண்டு சுவாசக் கவசங்கள் அணியுங்கள்!
May 27, 2021
காற்றின் வழி பரவக்கூடிய கிருமிகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, 2 சுவாசக் கவசங்களை சேர்த்தே அணிவது ஊக்குவிக்கப்படுவதாக, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், N95 வகை சுவாசக் கவசம் அணிபவர்கள், இரண்டு சுவாசக் கவசங்கள் அணிய தேவையில்லை என, சுவாச நோய் சிகிச்சைக்கான நிபுணர் Dr Kow Ken Siong கூறியுள்ளார்.
“a professional grade N95 mask filters up to 95% of viral particles in contrast studies have shown that doubling up on surgical mask shows only a marginal increase in protection to 89%. So in balance it doesn’t add up to double mask. And it is probably pointless to double mask if one is already wearing an N95 mask.”
2 சுவாசக் கவசங்களை அணிவதன் வாயிலாக, கிருமித் தொற்றில் இருந்து 95 விழுக்காடு பாதுகாப்பைப் பெறலாம் என சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah முன்னதாக கூறியிருந்தார்.
தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருந்துகிறோம்!
நேற்று 60 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான AstraZeneca COVID-19 தடுப்பூசிக்கான முன்பதிவின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளுக்கு, COVID-19 தடுப்பூசி பணிக் குழு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.
தன்னார்வ முறையில் அத்தடுப்பூசிக்கு பதிந்துக் கொள்ள முயன்ற மக்களில் பெரும்பாலானவர்கள், தடுப்பூசி முன்பதிவுக்கான அகப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் ஏமாற்றமடைந்தனர்.
நண்பகல் மணி 12.20க்கு தொடங்கப்பட்ட அந்த முன்பதிவு அடுத்த ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது.
அந்த நேர இடைவெளியில், 9 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் பதிவானதாக அக்குழு கூறியுள்ளது.
சுயமுடக்கத்தை பின்பற்றுங்கள்!
சமூகத்தில் பதிவாகும் COVID-19 பெருந்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள், Self lockdown சுயமுடக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா தொற்று ஏற்படலாம்;
அல்லது யார் வேண்டுமானாலும், தெரியாமலேயே தங்களுக்கு அடுத்திருப்பவருக்கு கொரோனா தொற்றை பரப்பலாம் என்பதே உண்மை என சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
சமூகத்தில் நடமாட்டங்கள் குறையாத வரை, COVID-19 சீற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என அவர் சொன்னார்.
நாட்டில் புதிய உச்சமாக, நேற்று ஏழாயிரத்து 478 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஒரே நாளில் ஆக அதிகமாக 63 பேர் அத்தொற்றுக்கு பலியாகினர்.
Ismail Sabri: மாநிலம் கடந்து பயணித்தன் விளைவு, clusterகள் அதிகரித்துள்ளன!
கடந்த இரு மாதங்களாக நாட்டில் COVID-19 புதிய clusterகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மாநில எல்லைகளை கடந்த பயணங்கள் தான் காரணம்!
ஏப்ரல் மாதம் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை சேகரிக்கப்பட்ட தரவுத் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அத்தகவலை தெரிவித்துள்ளார்.
மாநில எல்லைகளை கடந்து பயணம் செய்ததன் விளைவாக இதுவரை பதிவான 50 clusterகளின் கீழ், ஆயிரத்து 966 COVID-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.
Tajuddin, Prasarana தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!
Pasir Salak நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Tajuddin Abdul Rahman, Prasarana தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சரின் கையொப்பமிடப்பட்ட Tajudddinனின் பணி நீக்கக் கடிதம் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்நிலையில், தனது பணி நீக்கம் தொடர்பில் அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என, Tajuddin கூறியுள்ளார்.
Kelana Jaya LRTக்கான பாதையில் இரு இலகு ரயில்களை உட்படுத்தி நிகழ்ந்த விபத்து தொடர்பான செய்தியாளர் சந்திப்பை Tajudddin வழிநடத்திய விதம் மோசமாக இருந்ததாக கூறி, முன்னதாக மலேசியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather