Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

48 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள், குழந்தைகளுக்கு COVID-19 பாதிப்பு!

May 26, 2021


நாட்டில் சிறார்கள் மற்றும் குழந்தைகளை உட்படுத்திய COVID-19 பாதிப்பு, கவலையளிப்பதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

48 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள், குழந்தைகளுக்கு covid-19 பாதிப்பு!

சிறார்கள், குழந்தைகள் என இதுவரை 48 ஆயிரத்து 261 பேருக்கு அத்தொற்றுப் பீடித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அவர்களில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் 18 மாதங்களுக்கும் குறைவானவர்கள் என அவர் தெரிவித்தார்.

இப்புதிய நிலவரத்தை பெற்றோர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பிள்ளைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்ப வேண்டாம் எனக் கூறிய அமைச்சர், தேவையான நேரங்களில் அவர்கள் சுவாசக் கவசம் அணிவதையும், அடிக்கடி கைகளை கழுவி, கிருமி நாசினி பயன்படுத்துவதையும் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டில் ஆகக் கடைசியாக, இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 289ஆக பதிவானது.

 

LRT விபத்து நிலவரம்.....

Kelana Jaya LRT-க்கான பாதையில் இரு இலகு ரயில்களை உட்படுத்திய விபத்தில் தொடர்புடைய, ரயில் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் SOPக்கு ஏற்பட அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர் Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார்.

48 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள், குழந்தைகளுக்கு covid-19 பாதிப்பு!

இதன் வழி, அவ்விபத்து மீதான விசாரணைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்ய முடியும் என்றாரவர்.

இதனிடையே, அந்த 32 வயது ஓட்டுநர் மீதான சிறுநீர் பரிசோதனையில், அவர் போதை மருந்து உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக, Dang Wangi மாவட்ட காவல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அவ்விபத்துக்கு மனிதக் கோளாறே காரணம் என்பதை போக்குவரத்து அமைச்சர் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

மற்றொரு நிலவரத்தில், அவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் மூன்று பேருக்கு KL மருத்துவமனை ICU பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பு கூறியிருக்கின்றது.

 

 

 

சுவாசக் கவசம் அணியவில்லை? Tajuddin மீது விசாரணை!

COVID-19 தடுப்பு SOPகளை மீறியதாக கூறப்படுவது தொடர்பில், கோலாலம்பூர் காவல் துறை, Prasarana தலைவரை விசாரித்து வருகின்றது!

Kelana Jaya LRTக்கான பாதையில் நிகழ்ந்த இலகு ரயில் விபத்து குறித்து நடத்தப்பட்ட அண்மைய நேரடி செய்தியாளர் சந்திப்பின் போது, Datuk Seri Tajuddin Abdul Rahman சுவாசக் கவசம் அணியவில்லை என புகார் செய்யப்படிருக்கிறது.

48 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள், குழந்தைகளுக்கு covid-19 பாதிப்பு!

இதன் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என அத்துறை தெரிவித்தது.

இதனிடையே, அவ்விபத்தில் தொடர்புடையவரென நம்பப்படும், LRT ரயில் ஓட்டுநர், சம்பவத்தின் போது போதைப் பொருள் உட்கொண்டிருக்கவில்லை என Dang Wangi காவல் துறை கூறியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகள் நீடிக்கும் நிலையில், அந்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us