← Back to list
MCO 3.0, முதல் MCO-வைப் போல் அல்ல!
May 12, 2021
இன்று தொடங்கியுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 3.0 , கடந்தாண்டு முதல் முறையாக அமுல்படுத்தப்பட்ட MCO-வைப் போன்றது அல்ல!
மக்களின் அன்றாட வாழ்க்கையில் சுமையை ஏற்படுத்தாத வகையில் இம்முறை இந்த MCO இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
அதனால் தான் இம்முறை கடுமையான SOPகளின் கீழ், பொருளாதார துறைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், MCO-வுக்கான SOPகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உடனடி தண்டம் விதிக்குமாறு, காவல் துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அரசாங்கம் சிறப்புச் சலுகை வழங்குவதாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தவறான கண்ணோட்டத்தை சரி செய்ய அதுவே சிறந்த வழி என, Datuk Seri Ismail Sabri கூறியுள்ளார்.
80% கொரோனா சம்பவங்கள் சமூக பரவல் வாயிலாக ஏற்பட்டவை!
நாட்டில் அண்மைய காலமாக பதிவாகி வரும் COVID-19 சம்பவங்களில் ஏறக்குறைய 80 விழுக்காடு, சமூகப் பரவல் வாயிலாக ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன் இருந்தது போல, அவை clusterகள் வாயிலாக பரவவில்லை என சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
அதனால் தான், சமூகத்தில் இத்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த MCO 3.0 அவசியமாகியிருப்பதாக அவர் சொன்னார்.
அதே சமயம், மருத்துவமனைகள் மற்றும் அதன் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடாமல் இருப்பதை உறுதிச் செய்யவும் தான், MCO அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், நாட்டில் COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த அவசர காலம் பெரிய அளவில் உதவியிருப்பதாக, Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
குறிப்பாக, இக்காலக்கட்டத்தில் சில இடைத்தேர்தல்களை ஒத்தி வைக்க முடிந்ததாக அவர் சொன்னார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களில் நடைப்பெற்ற தேர்தல்களும், தேர்தல் பிரச்சாரங்களும் அந்நாட்டில் கொரோனா மீண்டும் பரவ காரணம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், கொரோனா சம்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 3.0-வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களுக்கான SOP-கள்!
இன்று நடப்புக்கு வந்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப, முஸ்லீம் அல்லாதவர்களின் வழிப்பாட்டு தலங்களுக்கான புதிய SOPகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களை கையாளக்கூடிய வழிப்பாட்டுத் தலங்களில் 50க்கும் மேற்பட்டோர் இருக்கக்கூடாது.
ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே நுழையக்கூடிய வழிப்பாட்டுத் தலங்களில், 20 பேர் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கூறியுள்ளது.
வழிப்பாட்டு நேரம் அதிகாலை 6 மணியில் இருந்து பகல் 2 மணி மற்றும் மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை என வகுக்கப்பட்டுள்ளது.
வழிப்பாட்டுக்கு முன்னும் - பின்னும், 30 நிமிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
COVID-19 தடுப்பூசி: 'Walk-in' முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது!
COVID-19 தடுப்பூசிப் போட்டுக் கொள்ள முன்பதிவு செய்யாமல், யாரும் அதனை போட்டுக் கொள்ள முடியாது!
முறையாக முன்பதிவு செய்து, வருகை உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே அம்மையங்களுக்குச் செல்ல வேண்டும் என, COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கான நடவடிக்கை குழு கூறியிருக்கின்றது.
முன்பதிவு செய்தும் சிலர் அம்மையங்களுக்குச் செல்ல தவறுகின்றனர்;
அதனை வாய்ப்பாக கருதி, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை "walk-in" முறையில் போட்டுக் கொள்ளும் நோக்கத்தில் சிலர் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, வரிசைப் பிடித்து காத்திருக்கும் சம்பவங்களை அக்குழு சுட்டிக் காட்டியது.
அப்படி யாரும் தடுப்பூசி மையங்களில் காத்திருக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather