← Back to list
மூவாயிரத்துக்குக் குறைந்தது!
May 10, 2021
நாட்டில் மேலும் 17 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக மூவாயிரத்து 807 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 149 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கிளந்தான், KL, ஜொகூரிலும் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
KL உலக வாணிக மையத்தில் இம்மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ள சிலருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு தேதி மறு அட்டவணையிடப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அத்தேதிகள் மே 17ழில் இருந்து 23 வரை என மாற்றப்படுவதாக அவர் சொன்னார்.
நெரிசலைத் தவிர்க்கவே அவ்வாறு செய்யப்படுகிறது.
அத்தேதி மாற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் MySejahtera செயலி வாயிலாகவும் நாளை முதல் தெரிவிக்கப்படும்.
MySejahtera செயலியில் தங்களது விவரங்களை இதற்கு முன் பதிவு செய்தவர்கள் முகவரி விவரங்களை மீண்டும் அனுப்ப வேண்டும் எனக் கூறப்படுவதை அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் மறுத்திருக்கிறார்.
அவ்வாறு பரவியுள்ள தகவல் உண்மையில்லை என Khairy Jamaluddin தெளிவுபடுத்தினார்.
உண்மையில் அக்கூடுதல் தகவல், அச்செயலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட அம்சம் என தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் விளக்கினார்.
Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்காமல் தடுக்கும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம்.
சுகாதார அமைச்சு அவ்வாறு எச்சரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather