← Back to list
இந்தியாவிலுள்ள மலேசியர்களை அழைத்து வர ஏற்பாடு!
May 07, 2021
இந்தியாவில் COVID-19 பெருந்தொற்றின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அந்நாட்டின் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள மலேசியர்களை, தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
அதற்காக சிறப்பு விமான சேவை வழங்கப்படும் என, வெளியுறவு அமைச்சர் Datuk Seri Hishammuddin Hussein கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்ததும், அந்த சிறப்பு விமானம் புது டெல்லி மற்றும் மும்பைக்கு புறப்படும் என்றாரவர்.
இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவும், மலேசியா வந்தடைந்த பிறகும் அவர்களுக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அரசாங்கம் நிர்ணயிக்கும் மையங்களில் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.
எனவே, இச்சிறப்பு ஏற்பாட்டின் கீழ் நாடு திரும்ப விரும்புவோர், புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள மலேசிய உயர் ஆணையம் மற்றும் பேராளரகத்தில் பதிந்துக் கொள்ளலாம்.
ஆகக் கடைசி நிலவரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்றுப் பீடித்துள்ளது.
24 மணி நேரங்களில், மூவாயிரத்து 900யிரத்திற்கும் அதிகமானோர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
வறுமையில் வாடும் மக்கள்!
கொரோனா சீற்றம் காரணமாக இந்தியாவில் 23 கோடி பேர் பேர் வறுமையில் சிக்கி வாடுவதாக, புதிய ஆய்வு கூறுகின்றது.
கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி, ஏறக்குறைய 10 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்;
அவர்களில் 15 விழுக்காட்டினர் கடந்தாண்டு இறுதி வரை, வேறு வேலையில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களில் பலர் தங்களது வீடுகளில் உணவு விகிதத்தை குறைத்துக் கொண்டிருப்பதோடு, மோசமான கடன் பிரச்னையில் சிக்கி தவிப்பதாக அந்த ஆய்வு காட்டுகின்றது.
AstraZeneca தடுப்பூசி திட்டம் விரிவுப்படுத்தப்படும்!
AstraZeneca தடுப்பூசியை தன்னார்வ முறையில் போட்டுக் கொள்ளும் திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து, அத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
மேலும் அதிகமான வயதானவர்கள் அத்தடுப்பூசி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.
அதற்கான ஏனைய தகவல்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
விளையாட்டு சார்ந்த நிலையங்கள் மூடப்பட வேண்டும்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று தொடங்கி, உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சார்ந்த நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும்!
இரு வாரங்களுக்கு அவை செயல்பட அனுமதி இல்லை என, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
32% சம்பங்கள் சிலாங்கூரில் பதிவாகின!
ஒரே நாளில் மிக அதிகமான COVID-19 சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் நீடிக்கின்றது.
ஆகக் கடைசியாக பதிவான மூவாயிரத்து 551 COVID-19 சம்பவங்களில் ஏறக்குறைய 32 விழுக்காடு, அதாவது ஆயிரத்து 130க்கும் அதிகமான கொரோனா சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather