← Back to list
சிலாங்கூரில் 6 மாவட்டங்களில் MCO!
May 04, 2021

சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில் நாளை மறுநாள் ஆறாம் தேதியில் இருந்து மே 17 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமலுக்கு வருகிறது.
கிள்ளான், Kuala Langat, Hulu Langat, Petaling, Gombak, Sepang ஆகியவையே அம்மாவட்டங்களாகும்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை அறிவித்தார்.
MCO அமலில் இருக்கும் காலக் கட்டத்தில் மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.  
இவ்வேளையில், Kuala Selangor, Hulu Selangor, Sabak Bernam ஆகியவற்றில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO நீடிக்கும் என அமைச்சர் சொன்னார்.

இவ்வேளையில் MCO அமலில் உள்ள பகுதிகளில் நோன்புப் பெருநாளின் முதல் நாளில் மட்டுமே ஒருவர் மற்றவர்கள் வீட்டுக்குச் செல்ல முடியும்; அதுவும் ஒரு வீட்டில் 15 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
CMCO, மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCO பகுதிகளில் நோன்புப் பெருநாளின் முதல் மூன்று நாட்களுக்கு ஒரு வீட்டில் 20 மற்றும் 25 பேர் வரை இருக்கலாம்.
எனினும் திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு அனுமதி இல்லை.

நாட்டில் புதிதாக மேலும் 23 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக மூவாயிரத்து 120 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் மிக அதிகமாக 675 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சரவாக், KL மற்றும் ஜோகூரிலும் கூட அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் ஓர் அங்கமாக அத்தடுப்பூசி இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.
எனவே அதனைச் செலுத்திக் கொள்வோருக்கு காப்புறுதி பாதுகாப்பு உண்டு என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin உத்தரவாதம் அளித்தார்.
தன்னார்வ முறையில் AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் பதிவு செய்து கொண்டுள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நாளை முதல் அடுத்தடுப்பூசி செலுத்தப்படும்.

AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பவர்கள், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் தங்களது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
தடுப்பூசி பெறப்பட்ட நான்கு நாட்களில் இருந்து நான்கு வாரங்களுக்குள் பக்கவிளைவுகள் அல்லது அறிகுறிகள் ஏதும் இருந்தால் அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தலைவலி, கண் பார்வை மங்குதல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அந்த அறிகுறிகளில் அடங்கும்.   
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather