← Back to list
மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் AstraZeneca!
May 03, 2021

AstraZeneca வகை தடுப்பூசிக்கு சிலாங்கூர் மக்கள் மத்தியில் முழு ஆதரவு கிடைத்து வருகின்றது!
நேற்று அத்தடுப்பூசிக்கான பதிவு நடவடிக்கைகள் தொடங்கி சில மணி நேரங்களிலேயே, அனைத்து தேதிகளுக்கும் பொது மக்கள் முழுமையாக முன்பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையானது Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்னும் அதிகமானோரை ஊக்குவிக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக, தேசிய Covid-19 தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairry Jamaluddin தெரிவித்துள்ளார்.
அவ்வகை தடுப்பூசி இப்போதைக்கு சிலாங்கூர் மற்றும் KL மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
எனினும் இம்மாதம் இன்னும் ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வாங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், பிற மாநிலங்களுக்கும் அதனை வழங்க வாய்ப்பிருப்பதாக KJ சொன்னார்.
------
இதனிடையே தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசு, IDCC Shah Alamமில் சிறப்பு AstraZeneca தடுப்பூசி மையமொன்றை அமைக்கவுள்ளது.
அம்மையம் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தயாராகிவிடும் என மாநில MB Datuk Sri Amiruddin Shari தெரிவித்தார்.
அது தயாரானதும், பொது மக்கள் தன்னார்வ முறையில் அங்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அவர் சொன்னார்.
------
இவ்வேளையில் AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டவர்களில் ஒரு சிலருக்கு MySejahtera செயலி வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிவிப்பு கிடைத்த பொது மக்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருப்பதாக The Star தகவல் கூறுகின்றது.
எந்த அறிவிப்பும் இல்லாதவர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக அது கூறியது.
-----
சுபாங் மாநகர் மன்ற அலுவலக பணியாளர் 11 பேருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து, அவ்வலுவலகம் இன்று மூடப்பட்டது.
அக்கட்டிடத்தில் கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பொது மக்கள் இணையம் வாயிலாக வேண்டிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
------
நாட்டின் புதிய தேசிய காவல் படை தலைவராக Datuk Seri Acryl Sani Abdullah Sani இன்று பொறுப்பேற்கிறார்.
ஈராண்டுகள் கழித்து பணி ஓய்வு பெறும் Abdul Hamid Badorருக்குப் பதிலாக அவர் அப்பதவியை ஏற்றுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather