Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நடிகர் விவேக் காலமானார்!

Apr 17, 2021


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலமானார்!

நடிகர் விவேக் காலமானார்!

மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது நடிகர் விவேக், இந்திய நேரப்படி அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

1961ஆம் ஆண்டு கோவிட்பட்டியில் பிறந்த நடிகர் விவேக், 1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக், சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சின்னக்கலைவாணர் என்றழைக்கப்பட்டு வந்த நடிகர் விவேக், சுற்றுச் சூழல் ஆர்வலராக, மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக்கின் திடீர் மறைவுக்கு இந்திய திரையுலகமும், உலக ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

அவரது உடல் இன்று மாலை விருகம்பாக்கத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்....

தடுப்பூசி போட்டாலும், SOP அவசியம்!

 

COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு மீண்டும் அத்தொற்று பீடிக்க வாய்ப்புண்டு; ஆனால், அதன் அறிகுறிகள் மிதமான அளவில் மட்டுமே இருக்கும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நடிகர் விவேக் காலமானார்!

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவப் பணியாளர்களில் 40 பேருக்கு அத்தொற்று பீடித்திருக்கும் தகவல் குறித்து பேசுகையில், அமைச்சு இதனை தெரிவித்தது.

எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், SOPகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அமைச்சு வலியுறுத்தியது.

நாடு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடையாத வரை அத்தொற்று பரவல் சமூகத்தில் இருக்கும் என்பதையும் அமைச்சு குறிப்பிட்டது. 

 

3 மாநிலங்களில், 5 இடங்களில் PKPD!

சபா, Kelantan மற்றும் பகாங் ஆகிய 3  மாநிலங்களில் ஐந்து இடங்களில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் காலமானார்!

அப்பகுதிகளில் COVID-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்துள்ளார்.

அந்த ஆணை இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

 

ஐவர் கைது!

JB-யில் 2ஆம் படிவ மாணவரை அடித்து தாக்கியதாக நம்பப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள், 15 முதல் 17 வயதானவர்கள் என காவல் துறை தெரிவித்தது.

நடிகர் விவேக் காலமானார்!

கேலிக் கிண்டல் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஈராண்டுகள் வரை போகக்கூடிய சிறைத் தண்டனையும், அல்லது தண்டம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம் என காவல் துறை தெரிவித்தது.

 

சர்ச்சைக்குரிய விளம்பரம்!

சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்ததாக நம்பப்படும் சில உள்ளூர் பிரபலங்கள், தொடர் விசாரணைக்காக கைதாகியிருப்பதை காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அந்த விளம்பரத்திற்கும், சூதாட்டத்திற்கும் தொடர்பிருப்பது தங்களுக்கு தெரியாது; தெரிவிக்கப்படவும் இல்லை என, அதில் சம்பந்தப்பட்டுள்ள பிரபலம் ஒருவர் mstarரிடம் கூறியுள்ளார்.

 

இன்று இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு!

இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத்தின் கணவர்,  இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெறும் அந்த இறுதிச் சடங்கின் நேரலையை இரவு 7.30 மணி தொடங்கி Astro அலைவரிசைகள் 512 மற்றும் 514கில் காணலாம்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather