← Back to list
இரண்டாம் கட்டம் வரும் 19தில் தொடங்குகிறது!
Apr 05, 2021
நாடு முழுவதும் அனைத்து பொது மற்றும் தனியார் சுகாதார முன் களப் பணியாளர்களுக்கும் இம்மாத இறுதி வாக்கில் முழுமையான தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு அவ்வாறு தெரிவித்திருக்கிறது.
இதுவரை சுமார் 63 ஆயிரம் சுகாதார முன்வரிசைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
கெடா, மலாக்கா, பஹாங், பினாங்கு, சபா, சரவாக், திரங்கானு மாநிலங்களிலும் லபுவானிலும் Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இம்மாதம் தொடங்குகிறது.
வரும் 19 ஆம் தேதி அது தொடங்குவதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
இவ்வேளையில் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன் அழைப்பு தேதி குறித்து MySejahtera வழி விவரம் தெரியப்படுத்தப்படும் என தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் சொன்னார்.
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆயிரத்து 70 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மீண்டும் மிக அதிகமாக 327 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் எழுவர் கிருமித் தொற்றுககுப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.
நோன்புப் பெருநாளின் போது மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிப்பது தொடர்பில் முடிவெடுப்பது எளிதான ஒன்றல்ல.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Dato Seri Ismail Sabri Yaakob அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன் மாநிலம் கடந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட போது Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே நடப்பு சூழலில் இடர் மதிப்பீடுகளைச் செய்த பிறகே சுகாதார அமைச்சு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்றாரவர்.
நெகிரி செம்பிலான், Port Dickson-னில் ஆசிரியை ஒருவர் Covid-19 தடுப்பூசி பெற்ற பிறகு உயிரிழந்ததாகக் கூறப்படுவதை காவல் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட 54 வயது மாது, கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோய், இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் அவதியுற்று வந்தது தெரிய வந்துள்ளதாக அது கூறியது.
எனவே அனாவசியமாகத் தடுப்பூசி குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்பி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என காவல் துறை பொது மக்களை எச்சரித்தது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக KLலிலும் Gombakக்கிலும் 58 பகுதிகளில் நாளை தொடங்கி அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்கத்திற்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather