Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசி: பதிவு திருப்தியளிக்கவில்லை!

Apr 05, 2021


COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டுள்ளோரின் எண்ணிக்கை திருப்தியளிக்கவில்லை!

எனவே அதற்கான காரணம் குறித்து ஆராயப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது.

covid-19 தடுப்பூசி: பதிவு திருப்தியளிக்கவில்லை!

3 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையில் 70தில் இருந்து 80 விழுக்காட்டினரை தடுப்பூசி திட்டத்திற்கு பதிய வைத்து, கொரோனா தொற்றுக்கு எதிராக கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது

ஆனால், தற்போதைக்கு 76 லட்சம் பேர் மட்டுமே அத்திட்டத்திற்கு பதிந்துக் கொண்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக அமைச்சு கூறியது.

இதையடுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விழிப்புணர்வு இயக்கம் போதவில்லை, முதலில் மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளட்டும், நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மக்களின் சிந்தனை அல்லது MySejahtera செயலியை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஆகியவற்றில், எது காரணமாக இருக்கும் என்பது ஆராயப்படும் என அமைச்சு தெரிவித்தது.

 

AstraZeneca: மலேசியா தொடர்ந்து பயன்படுத்தும்!

மலேசியா, AstraZeneca COVID-19 தடுப்பு மருந்தை தொடர்ந்து பயன்படுத்தும் என, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.

அத்தடுப்பூசியை தொடர்புப்படுத்திய சம்பவங்கள் மிக அரிதானவை  என்பதோடு, அதனால் ஏற்படக்கூடிய அபாய நேர்வுகளை காட்டிலும், நன்மைகளே அதிகம் என அவர் தெளிவுப்படுத்தினார்.

covid-19 தடுப்பூசி: பதிவு திருப்தியளிக்கவில்லை!

எனவே அத்தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துவதற்கான தேவை இல்லை என்றாரவர்.

சில நாடுகளில் அத்தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் பிரச்னை ஏற்படுவது குறித்து கேட்டப் போது Dr Noor Hisham விளக்கமளித்தார்.

ஒருவேளை AstraZeneca கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டை மலேசியா ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கு அரசாங்கம் மாற்றுத் திட்டங்களை கொண்டிருப்பதாக, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin விவரித்தார்.

covid-19 தடுப்பூசி: பதிவு திருப்தியளிக்கவில்லை!

"Kita ada satu tawaran daripada Pfizer untuk tambah sebanyak 12.8 juta dos tambahan kepada apa yang kita telah tempah, setakat ini kita telah tempah 30 juta dos dengan Pfizer, Pfizer offer kita another 12.8 million dos.” 

அதாவது, கூடுதலாக 12 புள்ளி 8 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்களை வழங்க அந்நிறுவனம் முன்வந்திருப்பதாக Khairy சொன்னார்.

 

அது பொய்யான தகவல்!

Perak Gerikகில் COVID-19 தடுப்பூசிக்கான 2ஆம் டோசைப் போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக காவல் அதிகாரி ஒருவர் மரணமடைந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது!

உடல் நலக்குறைவு காரணமாக அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதே உண்மை என மாநில சுகாதார துறை அறிக்கை வழி தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

அந்த காவல் அதிகாரியின் உடல் நிலை சீராக இருக்கின்றது.

 

திருமணத்தில் பரவிய கொரோனா!

சபாவில், திருமண நிகழ்வில் இருந்து COVID-19 புதிய cluster உருவாகியிருக்கின்றது.

அத்திருமணத்திற்குச் சென்றிருந்த பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் வாயிலாக அத்தொற்று முதலில் பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அந்த clusterரின் கீழ் 12 பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அந்த clusterருடன் தொடர்புடைய எஞ்சிய நபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

கொரோனா நிலவரம்.....

நாட்டில் நேற்று ஆயிரத்து 349 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

அதில் ஆக அதிகமாக 419 சம்பவங்கள் சரவாக்கை உட்படுத்தியுள்ளன.

அதற்கடுத்து 343 சம்பவங்களுடன் சிலாங்கூர் 2ஆம் இடத்தில் உள்ளது.

185 சம்பவங்களுடன் பினாங்கு மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.

இன்னும் 14 ஆயிரத்து 509 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


 

Maharashtra-வில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன!

இந்தியா Maharashtra மாநிலத்தில், COVID-19 தடுப்பு கட்டுப்பாடுகள் இன்று தொடங்கி கடுமையாக்கப்படுகின்றன.

இந்தியாவில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அம்மாநிலத்தை உட்படுத்தியிருப்பதே அதற்கு காரணம்.

ஆகக் கடைசியாக, இந்தியாவில் ஒரே நாளில் 93 ஆயிரத்து 249 COVID-19 சம்பவங்கள் பதிவாகின; அதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் சம்பவங்கள் Maharashtraவில் பதிவானதாக தரவுத் தகவல் காட்டுகிறது.

இதையடுத்து, Maharashtraவில், வார நாட்களில், இரவு நேர ஊரடங்கும், வார இறுதியில் முழு அடைப்பும் அமுல்படுத்தப்படவுள்ளது.



தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நிலவரம்...

தனது அரசியல் பணிகளுக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் திரைப்படத் துறையில் இருந்து விலகத் தயார் என நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார்!

 

அப்படி ஒரு முடிவுக்கு வரும் பட்சத்தில், ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்து விட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என்றார் அவர்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள கமலஹாசன், தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று செய்தியாளர்களிடத்தில் அவ்வாறு சொன்னார்.

தனி கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள அவர், கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை செய்வாய்க் கிழமை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

3,998 வேட்பாளர்கள் இம்முறை களத்தில் குதித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்தாற்போல் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க ஆளும் அ.தி.மு.க நம்பிக்கைக் கொண்டுள்ள வேளை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலுக்கு திரும்ப தி.மு.க போராடி வருகிறது.

மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather