Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிகளில் SOP-கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்!

Mar 29, 2021


COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயாத நிலையில், இது தான் கல்வி அமைச்சுக்கு மிக சவாலான காலக்கட்டம் என்பதை கல்வி அமைச்சர் Datuk Dr Mohd Radzi Jidin ஒப்புக் கொண்டுள்ளார்.

பள்ளிகளில் sop-கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்!

இருந்த போதிலும், SOPகள் முறையாக பின்பற்றப்பட்டதன் பலனாக, 2020 SPM தேர்வை சுமூகமாக நடத்தி முடிக்க முடிந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதே போல், பள்ளி நேரடி வகுப்புகளையும் பாதுகாப்பான முறையில் தொடர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த SOPகளை தொடர்ந்து பின்பற்றுமாறு பள்ளிகளை, அமைச்சர் வலியுறுத்தினார்.

பள்ளி நிர்வாகம் தவிர்த்து, பெற்றோரும் பிள்ளைகளுக்கு, பள்ளியில் இருக்கும் போது SOPகளை பின்பற்றுவதற்கான அவசியத்தை அடிக்கடி எடுத்துக் கூற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை தொடங்கி, இடைநிலைப் பள்ளி மாணவர்கள், தங்களது நேரடி வகுப்புகளை தொடங்கவுள்ளனர்.

 

போதிய அவகாசம் வேண்டும்!

தேர்தலில் வாக்களிக்கும் வயது 18க்கு குறைப்பது மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு ஆகிய இரு நடைமுறைகளையும் அமுல்படுத்த, தேர்தல் ஆணையத்திற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்!

பள்ளிகளில் sop-கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்!

சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan அவ்வாறு கூறியுள்ளார்.

வாக்காளர்களின் முகவரிகளை தேசியப் பதிவுத் துறையிடம் உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உட்படுத்தியிருப்பதால், Undi18 திட்டத்தை உடனே அமுல்படுத்துவது எளிதல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அவ்விரு நடைமுறைகளும் அடுத்தாண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு பிறகு அமுல்படுத்தப்படும் என ஆணையம் முன்னதாக கூறியிருந்தது.

SPR-ரின் அவ்வறிவிப்பு பல்வேறு கருத்துகளைப் பெற்றது;  18 வயதானோருக்கு வாக்குரிமை வழங்குதை தாமதப்படுத்தக் கூடாது எனக் கோரி, இளையோர் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் நாடாளுமன்ற கட்டிடம் முன் நடத்திய அமைதி மறியலும் அதில் அடங்கும். 

 

ஒத்துழைப்பு இல்லை!

15-ஆவது பொதுத் தேர்தலில் BERSATU கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என்ற தீர்மானத்தை அம்னோ பொதுப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

இதையடுத்து, BERSATU தலைமையிலான Perikatan Nasional அரசாங்கத்திற்கான ஆதரவை எப்போது மீட்டுக் கொள்வது என்பதை தீர்மானிக்கும் உரிமையை, அம்னோ உச்சமன்றத்திடமே பேராளர்கள் வழங்கியிருக்கின்றனர்.

15-ஆவது பொதுத் தேர்தலில் BERSATU-வுடன் ஒத்துழைப்பு இல்லை என UMNO முடிவெடுத்தால், அது அக்கட்சியின் உரிமை, அதைத் யாரும் தடுக்க முடியாது; தாங்களும் எதற்கும் தயார் என BERSATU கட்சியும் முன்னதாகக் கூறியிருந்தது.


சரவாக்கில் அதிக சம்பவங்கள்!

நாட்டில் நேற்று ஆயிரத்து 302 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

இம்முறை ஆக அதிகமாக 426 சம்பங்கள் சரவாக்கை உட்படுத்தியுள்ளன; அதற்கடுத்து சிலாங்கூர், பினாங்கு மற்றும் ஜொகூர் ஆகியவை உள்ளன.

பள்ளிகளில் sop-கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்!

இன்னும் 14 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வேளையில், ஆகக் கடைசியாக நாட்டில் மூன்று COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதில் ஒன்று வேலையிடம் தொடர்பானது; மற்றொன்று, சமூகப் பரவலை உட்படுத்தியது; மேலும் ஒன்று தடுப்புக் காவல் மையத்தில் ஏற்பட்டது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather