← Back to list
பெயர் பட்டியலில் தவறு உள்ளது - KJ!
Mar 10, 2021
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், முதல் கட்ட தடுப்பூசியைப் பெறுவோருக்கான பட்டியலில் தவறுகள் ஏற்பட்டிருப்பதை, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin ஒப்புக் கொண்டுள்ளார்.
முன்களப் பணியாளர்கள் அல்லாத சிலரின் பெயர்களை, தடுப்பூசி போடும் மையம் PPV தவறுதலாக அதில் பட்டியலிட்டு விட்டதாக Khairy தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.
சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை அடையாளம் கண்டு, அவர்களை அப்பட்டியலில் இருந்து வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Khairy சொன்னார்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் எந்த தவறும் செய்யவில்லை; அவர்கள் வரிசையை மீறிச் செல்வதாக கூறுவதும் நியாயமில்லை என்றாரவர்.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 தடுப்பூசிக்கான 2ஆவது டோசைப் போட்டுக் கொண்டவர்களுக்கு MySejahtera செயலி வாயிலாக இலக்கயியல் சான்றிதழ் வழங்குவதற்கான திட்டம் இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும் Khairy சொன்னார்.
சில உடல் நலப் பிரச்னைகள் காரணமாக அத்தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்கும் சான்றிதழையும் வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக அவர் கூறினார்.
மிக மோசமான அழற்சிக் கொண்டவர்கள் அதிலடங்குவர் என்றாரவர்.
நாட்டில் இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட பதிந்துக் கொண்டுள்ளனர்.
ஏறக்குறைய ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் அத்தடுப்பூசிக்கான முதல் டோசைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு சுற்றுலா குறித்த தகவல்.....
பொது மற்றும் தனியார் துறையினருக்கான வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை இன்னும் அமுலில் இருக்கின்றது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், உள்நாட்டில் மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார்.
எனினும், அவை விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
பதிவுப் பெற்ற சுற்றுலா முகவர்களை மட்டுமே பயன்படுத்துவது, நிபந்தனைக்குட்பட்ட MCO அமுல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களைக் கடந்துச் செல்லலாம்; ஆனால் நிற்க முடியாது ஆகியவை அவ்விதிமுறைகளில் அடங்கும் என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather