← Back to list
கள்ளப் பதிப்புகள் அடங்கிய TV android பெட்டி விற்பனை குறித்த எச்சரிக்கை!
Feb 11, 2021
கள்ளப் பதிப்புகள் கொண்ட தொலைக்காட்சி android பெட்டிகளை விநியோக்கும் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
அதே சமயம், இம்மாதிரியான சட்டவிரோத android பெட்டிகளை வாங்கி ஏமாற வேண்டாம் என பொது மக்களையும் அமைச்சு நினைவுறுத்தியது.
Shah Alamமில் கள்ளப் பதிப்புகள் அடங்கிய android பெட்டிகளை விற்று வந்த IT நிறுவனமொன்றின் இயக்குநர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சு பேசியது.
பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய முதல் நிறுவனமாக, அந்த IT நிறுவனம் விளங்குகின்றது.
அந்நிறுவ இயக்குநர் மீதான தண்டனை மார்ச் ஒன்றாம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நிறுவனம் செய்துள்ள ஒவ்வொரு சட்டவிரோத வடிமவமைப்புக்கும் தலா 4 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறையாமலும் 40 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் போகாமலும் தண்டம் விதிக்கப்படும்.
அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேல் போகாத சிறை, அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather