← Back to list
சீனப் புத்தாண்டை முன்னிட்டு வாங்கப்பட்ட டிக்கட்டுகள் ரத்து!
Feb 07, 2021
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக போக்குவரத்துத் துறையும் நட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றது.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் ஒன்றாம் தேதி முதல், 11 தேதி வரைக்குமான மூவாயிரத்து 934 ரயில் டிக்கட்டுகள் நாடு முழுவதும் விற்பனையாகியுள்ளன.
அவற்றுள் ஆயிரத்து 420 டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்தாண்டு நோன்பு பெருநாள் சமயமே அதிகம் பாதிக்கப்பட்டிருந்த டிக்கட் விற்பணை இந்த சீனப் புத்தாண்டுக்கு 80லிருந்து 90 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக கெடாவைச் சேர்ந்த பேருந்து நிறுவனம் ஒன்று Malay Mailலிடம் தெரிவித்துள்ளது.
MCO நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நேரம் தொடங்கி, தங்களின் டிக்கட்டுகளை ரத்து செய்ய ஏராளமானோர் தங்களைத் தொடர்பு கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
______
இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள தேசிய Covid-19 தடுப்பூசி திட்டத்தில் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கமும், மலேசிய மருந்தகச் சங்கமும் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆசிரியர்கள் மத்தியில் தடுப்பு சக்தியை அதிகரிப்பது அவசிய என கூறிய அச்சங்கங்கள், மாணவர்கள் மத்தியில் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தவும் இது உதவும் என விளக்கமளித்தன.
இதனால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வேலையிடங்களில் ஏற்படும் Cluster- களை விட பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் உட்படுத்திய Clusterகள் குறைவே என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
_____
இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் இதர வணிகங்களும் செயல்பட அனுமதிப்பது மீதான பேச்சு வார்த்தையை அரசாங்கம் நடத்தி வருகின்றது.
அதன் தொடர்பில் அத்துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையை அடுத்து அப்பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக உள்நாட்டு வாணிக பயனீட்டாளார் விவகார அமைச்சு தெரிவித்தது.
அதோடு, MCO காலத்தில் வாடிக்கையாளர்கள் உணவகத்தில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிப்பது குறித்தும் பரிசிலிக்கப்படுவதாக KPDNHEP தெரிவித்தது.
___
நாட்டில் Covid-19 தொற்று தொடர்பில் நேற்று பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 847 ஆகும்.
சிலாங்கூரில் ஆக அதிகமாக ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
புதிதாக 12 புதிய மரணங்கள் பதிவான வேளை, பலி எண்ணிக்கை 857ஆக அதிகரித்துள்ளது.
______
சிலாங்கூரில் கடந்த சில மாதங்களாக போதை பொருள் விநியோகித்து வந்ததாக நம்பப்படும் உள்நாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் உள்ளிட்ட இருவரைக் காவல் துறை கைது செய்துள்ளது.
அவ்விருவரும் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக Brickfields மாவட்டக் காவல் துறை தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather