← Back to list
Covid-19 பரவாமல் இருக்க வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்!
Feb 02, 2021
Covid-19 காரணமாக தனிமைபடுத்துதலை மேற்கொள்ளும் போது, நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய மிக அவசியம்!
அத்தொற்று பரவாமல் இருக்க அதுவும் ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறார் மலேசிய சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar.
மிதமான அல்லது அறவே அத்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாத கொவிட் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைபடுத்துதலை மேற்கொள்ள சுகாதார அமைச்சு அனுமதி அளித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட போது Dr Zainal நம்மிடம் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
______
கடந்தாண்டு மார்ச் மாதம் அமுல்படுத்தப்பட்ட முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமுலுக்கு வருமா என்ற கேள்விக்கு பதில் காண வரும் 4ஆம் தேதி வரை காத்திருக்குமாறு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்பான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம், நிதியமைச்சு, Bank Negara உள்ளிட்டவற்றின் ஆலோசனை கேட்கப்படும் என Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
MCO மீண்டும் கொண்டு வரப்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கத்தைக் கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்படும் என்றாரவர்.
நாட்டில் Covid-19 சம்வங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டி, முழு MCOவைக் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்து எழுந்து வரும் கேள்விகளுக்கு Sabri அவ்வாறு பதிலளித்தார்.
_____
முடி திருத்தும் நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசிலிக்க வேண்டும் என பினாங்கு மாநில முடி திருத்தும் நிலைய உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடுமையான SOPக்கள் பின்பற்றப்படுவதைத் தமதி தரப்பு உறுதிச் செய்யும் என அது உத்தரவாதம் அளித்தது.
கடந்தாண்டு விதிக்கப்பட்ட SOPயால் தங்களின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அச்சங்கம், அதிலிருந்து மீண்டு வர அரசாங்கம் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.
______
மியன்மாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ புரட்சியை அமெரிக்க அதிபர் Joe Biden கண்டித்துள்ளார்!
மியன்மார் தலைவர் ஆங் சான் சூ ச்சி உள்ளிட்ட அரசியல்வாதிகளைத் தடுத்து வைத்திருப்பது ஜனநாயக விரோத செயல் எனக் கூறிய Biden, அதற்காக அந்நாட்டின் மீது மீண்டும் தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி, ஓராண்டுக்கு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வதாக மியன்மார் இராணுவம் நேற்று காலை அறிவித்தது.
உலக நாடுகள் மியன்மார் இராணுவத்தின் அச்செயலை தொடர்ந்து கண்டித்து வருகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather