Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கடும் SOPக்களுடன் இரவுச் சந்தைகள், முடி திருத்தும் நிலையங்கள் செயல்படலாம்!

Feb 04, 2021


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக நாலாயிரத்து 571 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஈராயிரத்து 56 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்து ஜொகூரில் அதிகமாக 664 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் 17 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதாக மொத்த மரண எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது.

Covid-19 சம்பவங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தெரியப்படுத்தும் முறையை மேம்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

நாட்டில் அக்கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் கையாள அது அவசியம் என சுகாதார நிபுணர்கள் NSTயிடம் தெரிவித்துள்ளனர். 

சுகாதார அமைச்சு மக்களின் ஆகக் கடைசி நிலையைக் கண்டறியக்கூடிய இலக்கயியல் முறையை ஏற்படுத்த வேண்டும். 

அதன் வழி உடனடியாக சம்பவங்களைக் கண்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர்கள் கூறினர்.

கடும் தர செயல்பாட்டு நடைமுறைகளுடன் இரவுச் சந்தைகள் மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.

அதோடு முடி திருத்தும் நிலையங்களும் செயல்பட முடியும்.

ஆனால் முக ஒப்பனை, அழகு பராபரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி  கிடையாது என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வேளையில் கார் கழுவும் மையங்கள் இரவு 10 வரை இயங்கலாம் என அமைச்சர் அறிவித்தார். 

சீனப் புத்தாண்டையொட்டி அரசாங்கம் சில தர செயல்பாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளது. 

அவ்வகையில் ஒரே வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே தங்களுக்கிடையில் சீனப் புத்தாண்டைச்  சேர்ந்து கொண்டாட அரசாங்கம் அனுமதி அளிக்கிறது.

சீனக் கோவில்களில் வழிபாடுகள் நடத்த அனுமதியில்லை.

சிங்க நடனம், கடல் நாக நடனம், நாக ஊர்வலம், ஒபெரா நிகழ்ச்சிகள் ஆகியவையும் அனுமதிக்கப்படாது. 

அதே சமயம் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளையும் கடக்க முடியாது. 

Covid-19 நிலவரம் சற்று கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், அரசாங்கம் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அல்லது பொது முடக்கத்தை அமல்படுத்தாது என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.  

முழுமையான MCO கொண்டு வரப்பட்டால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மிகவும் பாதிக்கும் என Tan Sri Muhyidddin Yassin கூறினார்.    

“Jadi, dalam situasi pandemik pada masa ini, Kerajaan perlu mencari satu keadah yang berimbang, iaitu memastikan kehidupan ekonomi rakyat terus terjamin dan nyawa rakyat terus dilindungi. Kaedah yang terbaik pada masa ini ialah membenarkan sektor-sektor ekonomi perlu atau essential economic sectors untuk terus beroperasi dan pada masa yang sama melaksanakan SOP yang ketat”

ஜொகூரில் Pekan Nenas Pontian தடுப்புப் பிரிவு மற்றும் குடிநுழைவு தடுப்பு மையத்தின் kuartersசில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather