← Back to list
மலாக்காவில் இந்து அரசு ஊழியர்களுக்கு பதிவு செய்யப்படாத விடுப்பு!
Jan 25, 2021
Covid-19 பெருந்தொற்று சங்கிலியாகத் தொடர்வதை தடுக்கும் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
உடல் மற்றும் மனோ ரீதியில் நமக்கு களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தாலும், அப்போரட்டத்தைத் தொடர்ந்துதான் ஆக வேண்டும் என சுகாதார தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருமாறு அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.
கடந்தாண்டு இதே நாளில் நாட்டில் முதலாவது Covid-19 சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் புதிதாக மூவாயிரத்து 48 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 35 சம்பவங்களும் அடுத்து ஜொகூரில் 529 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 11 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து, பேரா, தைப்பிங் சிறைச்சாலை மற்றும் அதன் ஊழியர் kuartersசில் நாளை முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.
பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அது அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 717 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
தைப்பூசத்தை முன்னிட்டு மலாக்காவில் இந்து அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை பதிவு செய்யப்படாத விடுப்பு எடுக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த சிறப்பு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அது கூறியது.
மலாக்காவில் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு இரத ஊர்வலம் இருக்காது.
எனினும் பக்தர்கள் நிர்ணயிக்கப்பட்ட SOPகளைப் பின்பற்றி கோயில்களில் சிறிய குழுக்களாக பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பொது உயர்க்கல்விக் கழகங்களுக்கான நடப்பு கல்வித் தவணையின் இரண்டாவது semesterரின் தொடக்கத் தேதியை உயர்க்கல்வி அமைச்சு மறு ஆய்வு செய்கிறது.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருவதைத் தொடர்ந்து மாணவர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன.
அவர்களில் பலர் தங்களின் கவலையையும் விரக்தியையும் வெளியிட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
தேதி தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதும், semester தொடங்க ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிப்பு வெளியிடப்படும்.
இதற்கு முன் பொது உயர்க்கல்விக் கழகங்களுக்கான நடப்பு கல்வித் தவணையின் இரண்டாவது semester மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்தது.
முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து பாடம் போதிக்கும் ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யுமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சில பள்ளிகள் காலை மணி 7.30தில் இருந்து மாலை மணி 4.30 வரை மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தர ஆசிரியர்களை வற்புறுத்துவதாகக் கூறப்படுவதை அடுத்து NUTP அவ்வாறு கூறியது.
தீபகற்பத்தில் எந்த மாவட்டமும் Covid-19 தொற்று இல்லாத பச்சை மண்டலம் பகுதியாக இல்லை.
சிலாங்கூர், ஜொகூர், பினாங்கு, மலாக்கா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களும் சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather