Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: வேலையிட Clusterகள் அதிகரிக்கின்றன!

Jan 24, 2021


வேலையிடங்களில் ஏற்படும் Cluster சம்பவங்கள் குறித்து சுகாதார தலைமை இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்லார்.

இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான 350 Cluster சம்பவங்களில் 64 விழுக்காடு வேலையிடங்களை உட்படுத்தியிருப்பதை Tan Sri Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.

பெரும்பாலம் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் தான் அதிக Clusterகள் பதிவாவதாக அவர் சொன்னார்.

அதற்கு அடுத்த படியாக கட்டுமானத் துறை மற்றும் சேவை தொடர்பான துறைகள் என அவர் குறிப்பிட்டார்.

_______

இவ்வாண்டு தைப்பூசத்திற்குப் பத்துமலை திருத்தள ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

Jalan Bandar ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலைக்கான ரத ஊர்வலம் செல்வதற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளதை கூட்டரசு பிரதேச அமைச்சர் Tan Sri Annuar Musa உறுதிப்படுத்தினார்.

ஆனால், அது கடுமையான SOPக்களுக்கு மத்தியில் நடக்கும்;

ரத ஊர்வலத்தில் பத்து பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது;

முக்கியமாக மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை செல்லும் வரை ரத ஊர்வலத்தின் போது எங்கும் நிற்க அனுமதி இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

ரத ஊர்வலத்தின் போது நாதஸ்வரம் மற்றும் மேல தாளத்திற்கும் அனுமதி இல்லை; கடுமையான SOPக்கள் பின்பற்றப்படுவதை கோலாலம்பூர் மாநலகர் மன்றம் கண்காணிக்கும் என அமைச்சர் தனது Twitterரில் பதிவிட்டுள்ளார்.

______

தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வண்ணம் தைப்பூசத் தினத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்ட விடுமுறையை நிலைநிறுத்துமாறு கெடா MBரை மலேசிய தொழிற்சங்க காங்கரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்துக்களின் மிக முக்கிய சமய விழாவான தைப்பூசத்தன்று அவர்கள் வழிபாடுகள் மேற்கொள்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

அத்தினத்திற்கான விடுமுறைய ரத்து செய்வது அவர்களை மனக்கசப்புக்கு ஆளாக்குவது மட்டுமின்றி, விடுமுறை தேவைப்படுவோர் அந்த நாளுக்கு விடுமுறைதை விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு சுமைகளை எதிர்நோக்குவர் என MTUC கூறியது.

Covid-19 காரணமாகவும் அப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், கெடாவில் இவ்வாண்டு தைப்பூச தினத்திற்கு சம்பவ விடுமுறை இல்லை என கெடா MB அறிவித்தது குறித்து அது பேசியது.

______

மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க பழைய அனுமதி கடிதத்தைப் பயன்படுத்தும் வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு செய்யும் தரப்புகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கெடா காவல் துறை எச்சரித்துள்ளது.

______

ERL ரயில் நிலைய ஊழியர் ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, Bandar Tasik Selatan ரயில் நிலையம் மற்றும் KL Snetralலில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட ஊழியர் எந்த பயணியுடனும் நேரடி தொடர்பில் இல்லை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather