← Back to list
COVID-19 : விதிமுறை மீற வேண்டாம்!
Jan 18, 2021
COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்தவே, மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டுப் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்!
இருந்த போதிலும், ஒரு சிலர் இன்னும் இந்த விதிமுறையை மீறி செயல்படுவது மிகவும் வியப்பாக இருப்பதாக கூறுகின்றார், Bukit Aman குற்றப்புலானாய்வுத் துறையின் சட்டப் பிரிவுக்கான உதவி இயக்குநர் ACP S ஷண்முகமூர்த்தி சின்னையா.
ஏற்கனவே, கடந்தாண்டு இதே போன்ற தடை அமுலுக்கு வந்து, அதில் பழக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது புதிய நிபந்தனை இல்லை என்பதால், அதனை பின்பற்றுவதில் மெத்தனம் காட்டுவது சரியல்ல என்றும் அவர் சொன்னார்.
இதற்கு முன் ஏறக்குறைய 30 பேர் அக்குற்றத்திற்காக பிடிப்பட்டவேளை, நேற்று அவ்வெண்ணிக்கை 66 ஆக அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், MCO 2.0 விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மாவட்டத்தை கடக்கவும் அனுமதியில்லை.
அப்படியே ஒருவேளை அதிமுக்கிய அலுவல்கள் இருந்தால், பயணம் மேற்கொள்ள அவர்கள் கட்டாயம் காவல் துறையின் அனுமதிக் கடித்தத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமர் அழைப்பு!
நாட்டில் அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்கள், அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டு தாக்கங்கள் ஆகியவற்றுக்கு தீர்வுக் காண ஆலோசனைகள் வழங்க முன்வருமாறு, சுகாதார நிபுணர்களை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தமக்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பிய மருத்துவ நிபுணர்களை, இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துப் பேச வருமாறு, Tan Sri Muhyiddin அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகக் கடைசியாக நாட்டில் மூவாயிரத்து 339 COVID-19 சம்பங்கள் பதிவாகியுள்ளன.
அதில் ஆக அதிகமாக ஆயிரத்து 300க்கும் அதிகமான சம்பவங்களை பதிவுச் செய்த மாநிலமாக சிலாங்கூர் திகழ்கின்றது.
அதற்கடுத்த நிலையில், சபாவும், ஜொகூரும் உள்ளன.
நேற்று ஏழுப் பேர் அத்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, மரண எண்ணிக்கை 601ஆக அதிகரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather