← Back to list
நாளை முதல் சோதனைகள் கடுமையாக்கப்படும்!
Jan 15, 2021
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக மூவாயிரத்து 211 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூர், ஜொகூர், சபா ஆகிய மாநிலங்களில் அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் எண்மர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் நாளை முதல் கடுமையாக்கப்படும்.
குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முயலுவோரை காவல் துறை அணுக்கமாகக் கண்காணிக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
“Mulai esok PDRM tidak akan bercompromi dgn mana2 pihak yang langgar sop terutamanya yang berkaitan dgn rentas negeri”
கிளந்தான் மாநிலம் முழுவதும் நாளை தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.
இம்மாதம் 29 ஆம் தேதி வரை அது அமலில் இருக்கும் என Sabri Yaakob தெரிவித்தார்.
அதே சமயம் சரவாக்கில் Sibu, Selangau, Kanowit ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதே காலக் கட்டத்திற்கு MCO அமல்படுத்தப்படுகிறது.
Covid-19 தடுப்பூசி பெறுவதற்கான பதிவு விரைவில் தொடக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
அது கட்டங் கட்டமாக அமல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக முன்வரிசைப் பணியாளர்களுக்கான பதிவு ஆரம்பமாகும்.
இரண்டாம் கட்டமாக நாட்பட்ட நோய்களால் அவதியுற்று வருவோர், முதியவர்கள் ஆகியோருக்கான பதிவாகும்.
18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாகப் பதிவு நடைபெறும் என அமைச்சு விளக்கியது.
Pfizer நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 12.8 மில்லியன் Covid-19 தடுப்பூசி பிப்ரவரி மாத இறுதியில் பெறப்படும் என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
நாட்டு மக்களில் 20 விழுக்காட்டினருக்குப் போட அது போதுமானதாக இருக்கும்.
ஆக்ககரப் பலனைப் பெற ஒவ்வொருவருக்கும் 21 நாட்கள் இடைவெளியில் இரு தடுப்பூசிகள் போடப்படும் என அமைச்சு தெரிவித்தது.
துணியிலான சுவாசக் கவசங்கள், Covid-19 கிருமித் தொற்று பரவக் காரணமாவதாகப் பரவியுள்ள செய்தித் தலைப்பை சுகாதார அமைச்சு மறுத்திருக்கிறது.
அத்தலைப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு தவறானது என அமைச்சு தெளிவுபடுத்தியது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் KL மாநகர் மன்றத்தின் நிர்வகிப்பின் கீழுள்ள அனைத்து பொது பூங்காக்களும் திறக்கப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் கூட்டமாக அல்லாமல் தனியாளாக மெதுவோட்டம், சைக்கிளோட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட என தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்திருப்பதைத் தொடர்ந்து கூட்டரசு பிரதேச அமைச்சு அவ்வாறு கூறியுள்ளது.
இதனிடையே கண் பார்வைச் சேவை அத்தியாவசியமானதாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால் MCO காலத்தில் அச்சேவையைப் பெறலாம் என அது தெரிவித்தது.
இன்று நள்ளிரவு முதல் RON95, RON97 பெட்ரோல் விலை தலா 5 சென் உயர்கிறது.
டீசல் விலை 3 சென் அதிகரிக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather