← Back to list
சிலாங்கூரில் தைப்பூச கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இல்லை!
Jan 09, 2021
COVID-19 பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக, இவ்வாண்டு சிலாங்கூரில் தைப்பூச கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் V. கணபதி ராவ் கூறியுள்ளார்.
பொங்கல் மற்றும் தைப்பூசக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, உதவி தேவைப்படும் அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மக்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
எனவே, பக்தர்கள் தத்தம் வீடுகளிலேயே பூஜைகள் நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
மற்ற நாடுகளின் தேர்தல்களை ஒப்பிடுவது சரியல்ல!
Tidak sesuai bandingkan pilihan raya negara lain - Khairy
COVID-19 பெருந்தொற்றின் சீற்றம் இன்னும் குறையாத நிலையில் நாட்டில் 15ஆவது பொதுத் தேர்தலை நடத்தஅரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்தி வருவது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று என, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.
"Sebab itu saya rasa tak sesuai membuat perbandingan (buat PRU-15) dengan negara lain. Yang cakap nak PRU-15 ini pun saya selalu tengok Facebook, mereka (adalah) yang tidak memakai pelitup muka dan terus bersalaman orang ramai,"
அத்தொற்றுக்கான தரவுத் தகவல்களில் அடிப்படையில் பார்க்கும் போது, ஒருவேளை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றே அவர் கருதுகின்றார்.
தண்ணீர் விநியோகம் சீரடைகின்றது!
Cheras அருகே உடைந்த நீர்குழாயை சரிசெய்யும் பணிகள் நேற்றிரவு நிறைவடைந்ததை அடுத்து, இன்று காலை வரை KL, Petaling மற்றும் Hulu Langat-டின் ஏறக்குறைய 57 விழுக்காட்டுப் பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியிருக்கிறது.
இன்று மாலை 6 மணி வாக்கில் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, Air Selangor தெரிவித்துள்ளது.
44 ஆயிரம் பேர் வரை வெள்ளத்தில் பாதிப்பு!
நாட்டில் பகாங், திரங்கானு, Kelantan, பேரா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தில் மொத்தமாக 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள், 400க்கும் அதிகமான துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Trump-பின் Twitter முடக்கம்!
அமெரிக்க அதிபர் Donald Trumpபின் Twitter கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
அவருடைய பதிவுகள் தொடர் கலவரங்களை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய இருப்பதாக Twitter கூறியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை Trump ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவத்தை அடுத்து, அவரது கணக்கை 12 மணி நேரத்திற்கு முடக்கிய Twitter, Trump தொடர்ந்து விதிமுறை மீறினால் அக்கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather