Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உணவகத்தில் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என்ற முடிவை அரசாங்கம் பரிசிலிக்க வேண்டும்!

Feb 08, 2021


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை சமயத்தில் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என்ற அரசாங்கத்தின் முடிவானது, சற்று ஏற்படையதாக இல்லை என மலேசிய அனைத்துலக வாணிக மையம் MITC கருதுகின்றது.

பல உணவு கடை வியாபாரிகளிடமிருந்து தங்களுக்கு வந்த கோரிக்கையை அடுத்து, உணவுகளை வாங்கிக் கொண்டு மட்டும் போவது அவர்களை பெரும் நட்டத்தில் தள்ளிவிட்டது தெரிய வந்துள்ளதாக அது கூறியது.

என்னதான் உணவுக் கடைகள் செயலபட அனுமதி கொடுக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் அக்கடைகளில் அமர்ந்து உணவு உண்ணவே அதிகம் விரும்புவர்.

எனவே, பெரும்பாலான உணவுக் கடை உரிமையாளர்கள் தங்களின் அம்முடிவை அரசாங்கம் மறுபரிசிலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாக MITC தெரிவித்துள்ளது.

_____

நாட்டில் Covid-19 தொற்று தொடர்பில் இன்று மூவாயிரத்து 100 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கம் போல் சிலாங்கூரில் ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் உறுதிச்செய்யப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாமல் இன்று ஆக அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

24 பேர் பலியானதை அடுத்து, பலி எண்ணிக்கை 896ஆக உயர்ந்துள்ளது.

_____

கடந்தாண்டு நவம்பர் மாதத்தை விட, டிசம்பர் மாதம் நாட்டில் வேலையின்மை விகிதம் 0.1 விழுக்காடு அதிகரித்திருப்பது புள்ளி விவரத்துறை வெளியிட்டுள்ள மலேசிய ஆள்பல அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

நவம்பரில் ஏழு லட்சத்து 64 ஆயிரம் பேர் வேலையிழந்த நிலையில், டிசம்பரில் ஏழு லட்சத்து 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

அவர்களில் 83.4 விழுக்காட்டினர் மட்டுமே தீவிரமாக புதிய வேலையைத் தேடுவதாகவும், எஞ்சியவர்கள் நிலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து மன சோர்வுக்கு ஆளாகியிருப்பதோடு, புதிய வேலை தேடுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அத்துறை கூறியது.

______

மலாக்காவில், இணைய தளத்தில் வந்த இல்லாத கடனுதவிக்கான விளம்பரத்தை நம்பி 20 ஆயிரம் ரிங்கிட் கடன் பெற முயற்சித்து 23 வயது பெண் ஒருவர் 19 ஆயிரத்து 600 ரிங்கட்டைப் பறிகொடுத்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather