← Back to list
பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேணாம்
Jan 10, 2021
எந்த புதிய ஆணை அமுலுக்குக் கொண்டு வருவதற்கு முன்பு, முன்னேற்பாடு செய்வதற்கு பொது மக்களுக்குக் கால அவகாசம் கொடுக்கப்படும்!
எனவே ஆருடங்களை நம்பி பதற்றத்தில் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் அண்மைய காலமாக Covid-19 சம்பவங்கள் மிக உயரிய எண்ணிக்கையில் பதிவாகி வருவதால், மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வரலாம் என பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
எதுவாயினும் அரசாங்கத்தின் அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு கூறிய அமைச்சர், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், பொது மக்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான கால அவகாசம் கொடுக்கப்படும் என்றார்.
____
இனி தலைநகரில் ஏற்படும் சாலை சேதங்கள் குறித்து பொது மக்கள் DBKLலின் புதிய Whatsapp கணக்கின் மூலம் புகாரளிக்கலாம்!
கோலாம்பூரில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாகப் புதுப்பித்து அச்சாலை பயனீட்டாளர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்யும் விதமாக அப்புதிய முயற்சி எடுக்கப்படுவதாக KL Mayor தெரிவித்துள்ளார்.
KLலில் அண்மைய காலமாக சாலையிலுள்ள குழிகள் மற்றும் சேதம் காரணமாக பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 8ஆம் தேதி முதல் இதன் தொடர்பில் 271 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவொத்தார்.
____
நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களில் சாலை சேதம் தொடர்பாக சுமார் 267 புகார்களை பொது பணி துறை பெற்றுள்ளது.
கிளாந்தான், ஜொகூர், பேராக், கிளாந்தான், திரங்காணு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் அதிலடங்கும்.
இதையடுத்து அந்த சேதங்கள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா என்பதை உறுதிச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொதுப் பணித் துறைகள் பணிக்கப்பட்டுள்ளன.
____
நாட்டில் ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது!
இன்று காலை வரை 40 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை, தற்போது 39க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
பஹாங்கில் ஆக அதிகமாக 26 ஆயிரத்து 500 பேரும், திரங்காணுவில் பத்தாயிரம் பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று நிவாரண மையங்கள் மூடப்பட்டுள்ளன.
____
நேற்று இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான Sriwijaya Air விமானத்தில் மலேசியர் யாரும் இல்லை என்பதை Wisma Putra உறுதிப்படுத்தியிருக்கின்றது!
62 பயணிகளுடன் Jakartaவிலிருந்து Pontianak சென்று கொண்டிருந்த அவ்விமானம்,நேற்று அதியம் இரண்டரை மணி வாக்கில் திடீரென தொடர்பை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather