← Back to list
MCO நீட்டிப்பு!
Jan 21, 2021
சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜொகூர், கிளந்தான், சபா, KL, Putrajaya, Labuan ஆகியவற்றில் தற்போது அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
முன்னதாக அம்மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும் இம்மாதம் 26 ஆம் தேதியுடன் MCO முடிவடைவதாக இருந்தது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yakkob அதனை அறிவித்தார்.
“Atas penilaian risiko dan nasihat KKM (Kementerian Kesihatan), sidang khas bersetuju untuk melanjutkan lagi PKP di Pulau Pinang, Selangor, Melaka, Wilayah Persekutuan (Kuala Lumpur, Putrajaya, Labuan), Johor, Kelantan dan Sabah sehingga 4 Februari 2021 iaitu diseragamkan dengan tarikh tamat PKP di negeri-negeri yang lain”
இதனிடையே, JB Westlite Taman Perindustrian Tampoi Jaya தங்கும் விடுதியில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆளையுடன் முடிவுக்கு வருகிறது.
மற்றொரு நிலவரத்தில், நாளை முதல் உணவகங்கள், உணவுக் கடைகள் உள்ளிட்ட உணவு விற்பனைத் தளங்கள் இரவு பத்து மணி வரை செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக Sabri கூறினார்.
கள்ளக் குடியேறிகள் தொடர்பில் 011-6251 1223 என்ற தொலைபேசி எண் அல்லது National Task Force Facebookக்கில் விவரங்களைப் பகிருமாறு தற்காப்பு அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
Covid-19 பரவலைக் கட்டுப்பட்டுத்தும் நடவடிக்கைகளுக்கு அத்தகவல்கள் அவசியமாகின்றன; தகவல் கொடுப்போரின் விவரங்கள் வெளியிடப்படாது.
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக மூவாயிரத்து 170 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
KLலில் மிக அதிகமாக 576 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 12 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.
அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidiக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு Covid-19 தொற்று இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனிடையே முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakக்கிற்கும் அத்தொற்று பீடிக்கவில்லை.
உலக சராசரி விகிதத்தை விட, அதிகமான மலேசியர்கள் Covid-19 பரவியுள்ள இக்காலக் கட்டத்தில் வீடுகளில் இருந்து வேலை செய்வது புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது.
சந்தை ஆய்வு நிறுவனமான Ipsos நடத்திய அந்த ஆய்வில் சுமார் 65 விழுக்காடு மலேசியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர்.
அது உலக சராசரி விகிதத்தைக் காட்டிலும் 13 விழுக்காடு அதிகமாகும் என The Star செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம் மலேசியர்களில் மூன்றில் இரு பங்கினர், வீட்டில் இருந்து வேலை சேயும் போது வேலை மற்றும் அன்றாட வாழ்க்கையைச் சமன்படுத்திக் கொள்வது சிரமமாக இருப்பதாகக் கருதுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
சிலாங்கூர், MAEPS மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சில Covid-19 நோயாளிகள் சூதாடியதாகக் கூறப்படுவது தொடர்பில், Sepang காவல் துறை விசாரித்து வருகிறது.
பொட்டலமிட்ட உணவுகளைப் பணயமாக வைத்து சில நோயாளிகள் சூதாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் முன்னதாகப் பரவியிருந்தது.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட காவல் துறை, விசாரணை அறிக்கையாகக் காத்திருப்பதாகக் கூறியது.
சிலாங்கூரில் சைக்கிளோட்டும் போது இரு சிறார்கள் சுவாசக் கவசம் அணியாததால் அவர்களின் தந்தைக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறி பரப்பப்பட்டு வரும் தகவலை காவல் துறை மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள அபராதக் கடிதம் உண்மையானதுதான்; ஆனால் அது வேறொருவருக்கு விதிக்கப்பட்டது என காவல் துறை Free Malaysia Todayயிடம் தெளிவுபடுத்தியது.
Whatsapp கணக்கைத் தன்வசப்படுத்தும் மோசடிகள் குறித்து கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
அம்மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுமக்களை சரிபார்ப்பு நோக்கத்திற்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆறு இலக்கக் குறியீட்டைப் பகிர உந்துவதாக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் எச்சரித்தது.
எனவே எந்த தரப்பிடமும் அத்தகைய குறியீட்டு எண்ணைப் பகிர வேண்டாம் என MCMC கேட்டுக் கொண்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather