Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Whatsapp Report line: சரியான அணுகுமுறை- MIROS

Jan 20, 2021


சேதமடைந்த சாலைகள் குறித்து பொது மக்கள் புகாரளிக்க ஏதுவாக, DBKL WhatsApp மூலம் ஏற்படுத்தித் தந்துள்ள வசதி பாராட்டுக்குரியது!

மக்கள் கண்களில் படும் சாலைப் பிரச்னைகள் ஒருவேளை DBKL அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனவே, இந்த Whatsapp வசதி வாயிலாக பொது மக்கள் அதிகாரத் தரப்பிடம் விஷயத்தை கொண்டுச் சேர்க்க முடியும் என்பதோடு, தீர்வும் எளிமையாக்கப்பட்டிருப்பதாக சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகம் MIROSசைச் சேர்ந்த DR குழந்தையன் KC மணி கூறுகின்றார்.

புகைப்படம்: Dr குழந்தையன் KC மணி

புகார் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு என்றால் அதை விட முக்கியம் அப்புகார்கள் எவ்வளவு சீக்கிரம் தீர்க்கப்படுகின்றன என்பது தான். எனவே, பயனீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் புகார்களை அதிகாரிகள் ஒன்று விடாமல் விசாரித்து உரிய நடவடிக்கைகளை முடிந்த சீக்கிரத்தில் எடுப்பார்கள் என தாம் நம்புவதாக UPMமின் பேராசிரியருமான குழந்தையன் சொன்னார்.
 

அந்த Whatsapp வசதியின் தேவை குறித்து பேசுவது ஒரு புறமிருந்தாலும், அதிகாரிகள் தங்களது பொறுப்பை சரி வரச் செய்ய வேண்டும் என்பதும் இவ்விவகாரத்தில் முக்கியமான ஒன்று என அவர் கூறுகின்றார்.

பயனீட்டாளர்கள் சாலையின் தரத்தை பராமரிக்க வேண்டும் என்றால், போடும்போதே அந்த சாலை தரமானதாக இருப்பதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டும் என்றாரவர்.

தரமில்லா சாலையில் கனரக வாகனங்கள் அதிக நேரம் பயணித்தால், அது அந்த சாலையை மோசமாக பாதிக்கும் என அவர் சொன்னார்.

தண்ணீர் தேங்குவதும் சாலை சேதமடைய ஒரு முக்கிய காரணம் என்று குழந்தையன் சொன்னார்.

ஒரு சாலையைப் போடும்போது என்னென்ன கூறுகளுக்கு சம்பந்தப்பட்ட சாலை கட்டுமானக் குத்தகையாளர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ராகா செய்தி பிரிவு கேட்ட போது அதற்கும் குழந்தயன் பதிலளித்தார்.

‘’தரமான சாலையைப் போட நான்கு வழிகள் மிக முக்கியமானவை. ஒன்று ‘’ material composition’’எனப்படும் பொருள் கலவை சரியான அளவில் இருக்க வேண்டும்.

‘’இரண்டாவது, ‘’binding coat’’. 

‘’மூன்றாவது Bitumen எனப்படும் கனிப்பொருளின் வெப்ப அளவும் சரியானதாக இருக்க வேண்டும்.

இவை சரியாக இருக்கும் பட்சத்தில் நான்காவதாக Compaction சரியாக இருக்கும்’’ என்றாரவர்.

இந்த நான்கு முக்கிய கூறுகள் சரியாக இருந்தால், எந்த சாலையும் நிச்சயம் தரமாக இருக்கும் என குழந்தையன் நம்மிடம் சொன்னார்.

‘’சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பு முதன்மையானது; அதற்கு சாலைகள் பாதுகாப்பானதாக இருப்பதை நாம் எப்போதும் உறுதிச் செய்ய வேண்டும். பொது மக்களும், அதிகாரிகளும் தத்தம் கடமைகளைச் சரியாகச் செய்தால் இது சாத்தியமே’’ என்றார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather