← Back to list
வெள்ளம்: உதவி அனுப்புவோர் மாவட்ட அதிகாரிகளை அணுக வேண்டும்!
Jan 11, 2021
நாட்டிலுள்ள வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் COVID-19 சம்பவம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yakoob தெரிவித்துள்ளார்.
அத்தொற்றை கட்டுப்படுத்த அம்மையங்களில் SOPகள் முறையாக பின்பற்றப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் அனுப்ப விரும்பும் அரசு சார்ப்பற்ற இயக்கங்கள், முதலில் மாவட்ட வெள்ள நிர்வகிப்பு மையங்களை தொடர்புக் கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர்.
இதன் வழி, உதவிகள் விநியோகிப்போரை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதோடு, அந்த உதவிகள் சமமாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிச் செய்ய முடியும் என அமைச்சர் கூறினார்.
கொரோனா சம்பவங்கள் அதிகம் பதிவான சிவப்பு மண்டலங்களைச் சேர்ந்த NGO உறுப்பினர்கள், வெள்ளத் துயர் துடைப்பு மையங்களுக்கு உதவிகள் அனுப்புவதற்கு முன்பாக, COVID-19 பரிசோதனை செய்துக் கொள்ளவும் வலியுறுத்தப்படுவதாக, Ismail Sabri தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், நாட்டில் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை சற்று குறைந்து 30 ஆயிரத்து 975 ஆயிரமாக பதிவாகியுள்ளது.
எனினும், பகாங்கில் அவ்வெண்ணிக்கையில் மாற்றமில்லை.
அங்கு 23 ஆயிரத்து 927 பேர் அம்மையங்களில் தங்கியுள்ளனர்.
ஜொகூரில் ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் அம்மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திரங்கானுவில் அவ்வெண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றது.
மனித வள அமைச்சு: உண்மையை மறைப்பதா?
சில முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு COVID-19 தொற்று பீடித்துள்ள தகவலை மறைத்து வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக மனித வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு கொரோனா பெருந்தொற்றுடன் போராடி வரும் நிலையில், ஒரு சில முதலாளிகளின் இச்செயல் மிகவும் வருத்தமளிப்பதாக Datuk Seri M. Saravanan சாடினார்.
விஷயம் வெளியில் தெரிந்தால், முழு அளவில் செயல் பட முடியாமல் போய், தங்களது தொழில் உற்பத்தி குறைந்து பாதிப்புகள் ஏற்பட்டு விடும் என முதலாளிகள் அஞ்சுவதை அமைச்சர் மேற்கோள்காட்டினார்.
இதையடுத்து, COVID-19 பீடித்த தங்களது தொழிலாளர்கள் குறித்து சுகாதார அமைச்சிடம் தகவளிக்குமாறு முதலாளிகளை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
SPM தேர்வு தொடர வேண்டும் - NUTP
COVID-19 தினசரி சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ஒத்தி வைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான SPM தேர்வுகள் திட்டமிட்டப்படியே அடுத்த மாதம் நடைபெறும் என்றே தாங்கள் எதிர்பார்ப்பதாக, தேசிய ஆசிரியர் பணியாளார் சங்கம் NUTP கூறியுள்ளது.
SPM தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு விடக்கூடாது என NUTP கருதுகின்றது.
புதிய வழமைகள் நீடிக்க வேண்டும்!
இம்மாதம் 20ஆம் தேதி தொடங்குமென எதிர்பார்க்கப்படும் 2021ஆம் ஆண்டுக்கான புதிய கல்வித் தவணையின் போது, பள்ளிகளில் புதிய வழமைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என கூறுகின்றார், பொது சுகாதார நிபுணர் Dr Mohd Hazizi Mohd Hasani.
நாட்டில் தற்போது COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலை மற்றும் குழப்பம் தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சில பெற்றோர்கள் இன்னும் தயக்கம் காட்டி வருவது அண்மையில் The Star மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்னும் சில பெற்றோர்கள், பிள்ளைகளின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களை பள்ளிக்கு அனுப்ப முடிவெடுத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather