← Back to list
மீண்டும் மூன்றாயிரத்தை எட்டியது Covid!
Feb 10, 2021
பேராக், Kampung Teluk Setiawan-நில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாவதால் அங்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுல்படுத்தப்படுகின்றது.
அங்கு EMCO நாளை முதல் இரு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என பாதிகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
Covid-19 SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 589 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 543 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு 42 பேர் தடுத்து வைக்கப்பட்ட வேளை, நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
------
Covid-19 தொடர்பில் நாட்டில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் மூவாயிரத்துக்கு உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக மூவாயிரத்து 288 புதிய சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூர், KL மற்றும் ஜொகூரில் ஆக அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
புதிதாக 14 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 923ஆக உயர்ந்துள்ளது.
------
இருவர் மட்டுமே உணவகங்களில் ஒரு மேசையில் அமர்ந்தூணவு உண்ண முடியும் என்ற தளர்வே போதுமானது!
இதன்வழி நிச்சயம் தங்களால் ஓரளவுக்காவது வருமானம் பெற முடியும் என கூறுகின்றார் மலேசிய முஸ்லீம் உணவக நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் Datuk Jawahar Ali Taib Khan.
கடந்த சில வாரங்களாக மோசமான பண நெருக்கடியைச் சந்தித்து வந்த தமது தரப்புக்கு, அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைக் கொடுத்திருப்பதாக அவர் கூறினார்.
இவ்வேளையில் தங்களின் கோரிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, இந்த அனுமதியை வழங்கிய அரசாங்கத்திற்கு அவர் PRESMA சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
------
மக்களின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் வர்த்தகத் துறைகள் செயல்பட அனுமதி வழங்கியிருக்கின்றது!
இப்போது அரசாங்கத்தின் SOPக்களைப் பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார், மலேசிய இந்திய வர்த்தக தொழில் துறை சங்கங்களின் சம்மேளனம் MAICCIயின் பொதுச் செயலாளர் Datuk Dr AT Kumararajah.
வணிகங்கள் மறுமலர்ச்சி பெறும் அதே வேளை, Covid-19 தொற்றும் முழு கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் உறுதிச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather