← Back to list
மேலும் அறுவர் பலி!
Oct 09, 2020
நாட்டில் மேலும் அறுவர் Covid-19னுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 354 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 352 உள்நாட்டில் பரவியவை.
சபா, பேரா, திரங்கானு மாநிலங்களில் புதிதாக 3 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சபாவில் நான்கு மாவட்டங்களில் அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
அவை Tawau, Kunak, Lahad Datu, Semporna ஆகிய மாவட்டங்கள் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
”Oleh kerana terdapat kes kes baru yang direkodkan di kawasan-kawasan ini, sidang khas harini telah bersetuju untuk melanjutkan lagi PKPD Bersyarat di empat daerah ini, bermula pada 13 Oktober 2020 sehingga 26 Oktober 2020”
மற்றொரு நிலவரத்தில், மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 381 பேர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.
Covid-19 சம்பவங்கள் பதிவாகும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என CUEPACS பரிந்துரைத்துள்ளது.
அக்கிருமித் தொற்றுச் சம்பவங்கள் உள்ள சில பள்ளிகள், கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை வழக்கம் போல் தொடருவது குறித்து அது கவலை தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளை நீண்ட காலத்திற்கு மூட வேண்டிய அவசியம் இல்லை.
Covid-19 தொற்றிய நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான மருத்துவ பரிசோதனையும் கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகளும் முடிவடைந்த பிறகு அப்பள்ளிகளைத் திறக்கலாம் என அது கூறியது.
Putrajaya, Presint எட்டில் உள்ள தேசியப் பள்ளியொன்று இன்று தொடங்கி 7 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் மேல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
Covid-19 பரவல் காரணமாக அப்பள்ளியின் இரு வகுப்பறைகள் இரு வாரங்களுக்கு மட்டுமே மூடப்படும் என் முன்னதாக கல்வித்துறை இயக்குனர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திரங்கானு, Dungunனில் மாணவர் ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பயின்று வந்த சமய இடைநிலைப்பள்ளி எட்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
அந்த ஒன்றாம் படிவ மாணவர் திருமண விழா தொடர்புடைய clusterரைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர் என மாநில கல்வித்துறை தெரிவித்தது.
Covid-19 தொடர்பில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் தெரிவித்திருக்கிறது.
13 அமைச்சர்களுக்கு அக்கிருமித் தொற்று பீடித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியிருப்பதை அடுத்து அது அவ்வாறு எச்சரித்தது.
சிலாங்கூர் கிள்ளான் துணை மாவட்டத்தில் பத்து இடங்களில் சாலைகள் மூடப்பட்டு ஐந்து சாலைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
வட கிள்ளான், தென் கிள்ளான் ஆகிய பகுதிகளை அது உட்படுத்தியிருப்பதாக காவல் துறை தெரிவித்தது.
கிள்ளான் துணை மாவட்டத்தில் இன்று முதல் 23 ஆம் தேதி வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுகிறது.
நாளை முதல் RON95, RON97 பெட்ரோல் விலை தலா நான்கு சென் இறங்குகிறது.
அவ்வகையில் RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 67 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 97 சென்னுக்கும் விற்கப்படும்.
டீசல் விலை ஒரு சென் சரிந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 69 சென்னாகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather