Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மீண்டும் ஈரிலக்க எண்!

Jun 11, 2020


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 31 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 19 சம்பவங்கள் அந்நிய நாட்டினரை உட்படுத்தியவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.  

மேலும் 51 பேர் பூரண நலம் பெற்றுள்ளனர். 

புதிதாக மரணம் பதிவாகவில்லை. 

மரண எண்ணிக்கை 118 ஆகவே இருக்கிறது.

 வர்த்தக விமானங்கள், விரைவு பேருந்துகள், டெக்சி, e-hailing உள்ளிட்ட பொது போக்குவரத்துச் சேவைகள் அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றி நேரக் கட்டுப்பாடு இன்றி செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

எனினும் அச்சேவை வழங்குவோரும் பயணிகளும் எந்நேரமும் சுவாசக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 

வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என தற்காப்பு அமைச்சு கூறியது.  

 கூட்டரசு பிரதேசத்தில் பச்சை மண்டலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், surauகள் ஆகியவற்றில் மேலும் அதிகமானோர் வெள்ளிக்கிழமை தொழுகை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

தொழுகை இடத்தைப் பொருத்து மூன்றில் ஒரு பங்கினர் தொழுகை மேற்கொள்ள முடியும் என சமய விவகார அமைச்சு தெரிவித்தது. 

இதனிடையே முஸ்லீம்கள் இவ்வாண்டு haj யாத்திரை செல்ல இயலாது என்றும் அது கூறியது. 

தனியார் பாலர் பள்ளிகள், tuition மையங்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOPயை கல்வியமைச்சு வரைந்து வருகிறது. 

வரும் 24 ஆம் தேதியில் இருந்து SPM, STPM உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள் உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகள் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். 

தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP அப்பரிந்துரையை முன் வைத்துள்ளது. 

ஆயினும் அது Covid-19 பரவலின் தற்போதைய நிலை மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முடிவைப் பொருத்தது என அச்சங்கம் கூறியது.

நாடு முழுவதும் ஊழியர் சேமநிதி வாரியம் EPF தனது முகப்புச் சேவைகளை மீண்டும் தொடங்கவிருக்கிறது. 

இம்மாதம் 15 ஆம் தேதி முதல் அச்சேவைகள் ஆரம்பிக்கப்படும். 

ஆயினும் இணையம் வாயிலாக முன் கூட்டியே தெரியப்படுத்தி, அனுமதி கிடைத்த பின்னரே பொதுமக்கள் முகப்புச் சேவைகளைப் பெறச் செல்ல முடியும்.

 அடுத்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளைச் சென்று காண அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

இருப்பினும் கைதிகளைச் சந்திக்க விரும்புவோர் இணையம் வாயிலாக முன் பதிவு செய்ய வேண்டும்; அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க வேண்டும் என சிறைச்சாலைத்துறை கூறியது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather