Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 பரிசோதனைகள் தொடரும் !

Jun 11, 2020


நாட்டில் கடந்த 3 நாட்களாக COVID-19 கோறனி நச்சில் தொற்று புதிய சம்பவங்கள் ஓர் இலக்க எண்ணில் பதிவாகி வருகின்றது.

இருந்தாலும், அக்கிருமித் தொற்றுக்கானப் பரிசோதனைகள் தொடரும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

“Jumlah saringan masih berterusan, iatu kumpulan sasar yang telah dikenalpasti oleh KKM. Ada Sembilan kumpulan sasar. Dan kita masih menjalankan saringan. Tetapi kadar dia dan unjuran kita menunjukkan semaking berkurangan”

இலக்கு வைக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அப்பரிசோதனைகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாக Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.

நேற்று வெறும் இரு சம்பங்கள் மட்டுமே பதிவாகின;

மார்ச் 18, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்தப் பிறகு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கையாக அது திகழ்கின்றது.

உடல் நலம் சரியில்லை என்றால் பள்ளிக்கு செல்ல வேண்டாம்!

உடல் வெப்ப நிலை 37.5 பாகை செல்சியல் அளவில் இருந்தால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தேவையில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தத்தம் வகுப்புகளுக்குச் செல்வதற்கான அடையாளங்களை மாணவர்கள் பின்பற்றுவதும் அவசியம் என அமைச்சு தெரிவித்தது.

கொரோனாப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஜூன் 24 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகின்றன.

எனினும், தேர்வுக்கு தயாராகி வரும் SPM, SVM, STPM, STAM வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்வார்கள்.

இதனிடையே, இவ்வாண்டுக்கான பாடத் திட்டங்களை முடிக்க பள்ளிகளுக்கு போதுமான கால அவகாசம் இருக்கும் என கல்வி அமைச்சு நம்புகிறது.

பள்ளிகள் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் போது, அப்பாடத் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.

சுவாசக் கவசம் முக்கியம்!

சுவாசக் கவசம் அணியாதவர்கள், பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்த முடியாது.

கொரோனாப் பரவலை அடுத்து, நாடு மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் இருந்தாலும், பொது மக்கள் இந்த உத்தரவை அலட்சியப்படுத்தக் கூடாது என போக்குவரத்து அமைச்சு கூறியது.

குற்றச்செயல் குறைந்தது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததில் இருந்து, நாட்டில் குற்றச்செயல் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் இருந்து அதன் குறியீடு 46 விழுக்காடு சரிவுக் கண்டிருப்பதாக Bukit Aman தெரிவித்தது.

தமிழகத்தில் அதிகரிப்பு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 927 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather