← Back to list
ஒரே நாளில் பதிவான மிக உயரிய எண்ணிக்கை!
Jan 07, 2021
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிக உயரிய எண்ணிக்கையாக இன்று புதிதாக மூவாயிரத்து 27 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜொகூரில் மிக அதிகமாக ஆயிரத்து 103 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்து சிலாங்கூரில் மிக அதிகமாக 706 சம்பவங்களும் சபாவில் 493 சம்பவங்களும் KLலில் 316 சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் எண்மர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஈராயிரத்து 145 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இதனிடையே கிருமித் தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், மார்ச் மாத வாக்கில் ஒரு நாளில் எண்ணாயிரம் சம்பவங்கள் வரை பதிவாகலாம் என சுகாதார அமைச்சு கணித்துள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் Covid-19 சம்பவங்களைக் கட்டுப்படுத்த, தர செயல்பாட்டு நடைமுறைகளைக் கடுமையாக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது, உண்மையில் நாட்டுக்கே பாதிப்பு.
அதோடு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கமே ஏற்பட்டிருப்பதாக முதலீட்டு திட்டமிடல் நிபுணர் Ooi Chun Hwa கருத்து தெரிவித்துள்ளார்.
Covid-19 நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், பொருளாதாரம் இயல்பாகவே சீரடைந்து விடும் என அவர் விளக்கினார்.
இதனிடையே அரசாங்கம் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கொண்டு வந்தால், முதலாவது MCOவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு போன்று மோசமாக இருக்காது என்றாரவர்.
வர்த்தகத் துறைகள், புதிய வழமைகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதோடு இணையம் வாயிலாக செயல்பட்டு வருவதை Chun Hwa சுட்டிக் காட்டினார்.
நாட்டில் சில மாநிலங்களில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமலுக்குக் கொண்டு வர தாங்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவலை தேசிய பாதுகாப்பு மன்றம் மறுத்துள்ளது.
அச்செய்தி உண்மையில்லை எனக் குறிப்பிட்ட MKN, பொதுமக்கள் மத்தியில் அது கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியது.
எனவே உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.
Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 393 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் மனமகிழ் மையங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.
பஹாங் மற்றும் ஜொகூரில் சில பகுதிகளில் இடைவிடாத மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
பஹாங்கில், Kuantan, Bera, Pekan, Rompin, ஜொகூரில் Segamat, Mersing, Kota Tinggi ஆகிய இடங்களில் அந்நிலை காணப்படும்.
இவ்வேளையில், கிளந்தான், திரங்கானுவில் Besut, Setiu, Kuala Nerus, Hulu Terengganu, Kuala Terengganu, Marang, ஜொகூரில் Kluang, Kulai, Johor Bahru ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என அத்துறை கவன எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரங்கானுவில், Dungun, Kemaman, பஹாங்கில், கேமரன் மலை, Lipis, Raub, Jerantut, Bentong, Temerloh, Maran ஆகிய இடங்களில் சனிக்கிழமை வரை மோசமான வானிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் ஆறு மாநிலங்களில் கிட்டதட்ட 41 ஆயிரம் பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் இன்னமும் இருக்கின்றனர்.
பஹாங்கில் தொடர்ந்து மிக அதிகமாக 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020 மலேசிய மக்கள் தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் வரும் 20 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடத்தப்படும்.
அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் நேரடியாக விவரங்களைத் திரட்டுவர்.
சங்கப் பதிவுத்துறை, இரு புதிய கட்சிகளின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறது.
அவை முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohammadட்டின் PEJUANG, இளைஞர், விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் Syed Saddiq Syed Abdul Rahmanனின் MUDA ஆகிய கட்சிகளாகும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather