← Back to list
நெடுஞ்சாலைகளிலும் முக்கியச் சாலைகளிலும் ரோந்து!
Jun 10, 2020
வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் PLUS நிறுவனம் கடப்பாடு கொண்டிருக்கிறது.
PLUSசின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் Mohd Yusuf Abd Aziz அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCO அமலுக்கு வந்துள்ளதை அடுத்து நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எனவே தங்களது பயணங்களை முறையாகத் திட்டமிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, தங்களது தர செயல்பாட்டு நடைமுறை SOPயின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் Touch n Go அட்டையில் தொகை அதிகரிப்பு செய்யும் சேவை இருக்காது என அவர் குறிப்பிட்டார்
போக்குவரத்தைக் கண்காணிக்க நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியச் சாலைகள் நெடுகிலும் ரோந்து காவல் வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
இன்று முதல் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், PDRMமின் புதிய பணியாக அவ்வாறு செய்யப்படுவதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலைக் கண்காணிப்பதோடு போதையில் வாகனமோட்டுவது, வேக வரம்பை மீறுவது உள்ளிட்ட சாலைக் குற்றங்களைக் கண்டறிவது அதன் முக்கிய நோக்கம் என IGP விளக்கினார்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCOவின் கீழ் அதிகமான தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றுவது உறுதிச் செய்யப்படும்.
SOPயை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் IGP எச்சரித்தார்.
தீயணைப்பு மீட்புத்துறை, நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
Covid-19 பரவலைத் தடுக்க, அம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு விளக்கியது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வியமைச்சு இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூரில் Covid-19 நிலவரம் சீரடைந்து வருவதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
நேற்று வரை உள்நாட்டினரை உட்படுத்திய புதிய சம்பவம் ஏதும் பதிவாகவில்லை என அது கூறியது.
இவ்வேளையில், சிலாங்கூரில் Hulu Langatட்டும் Sepangங்கும் சிவப்பு மண்டலப் பட்டியலில் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளன.
சிகை திருத்தும் மற்றும் சிகையலங்கார நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதை அடுத்து, தங்களுக்கு அதிகமான முன் பதிவுகள் கிடைத்திருப்பதாக மலேசிய சிகையலங்காரச் சங்கம் தெரிவித்திருக்கிறது.
எனினும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOP பின்பற்றப்படுவது உறுதிச் செய்யப்படும் என அது கூறியது.
காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை வயதானவர்கள் மற்றும் சிறார்களுக்கு மட்டுமே சேவை வழங்க வேண்டும் என்பது SOPயில் அடங்கும்.
ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி மலையேறுவது, Jungle tracking நடவடிக்கை, முகாமிடுதல் ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அது ஒரு நாள் நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்.
20 பேருக்கும் மேல் இருக்கக்கூடாது என தீபகற்ப வனத்துறை கூறியுள்ளது.
உலகப் பல்கலைக்கழகங்களின் தரப் பட்டியலில் மலாயாப் பல்கலைக்கழகம் 59 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
அதன் வழி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகின் மிகச் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் UM இடம் பெற்றிருக்கிறது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather