← Back to list
மீண்டும் ஓர் இலக்க எண்!
Jun 09, 2020
நாட்டில் புதிதாக 7 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் 281 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நெடுகிலும், பதிவான மிக அதிகமான எண்ணிக்கை அதுவென சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
புதிய சம்பவங்கள் குறித்து மேலும் பேசிய Datuk Dr. Noor Hisham Abdullah…
“Seperti dimaklumkan tiada kes warganegara dicatatkan hari ini, ini boleh dibanggakan, ini kerana pendekatan yang dibuat oleh kerajaan dan masyarakat.”
மரண எண்ணிக்கை 117 ஆகவே நீடிக்கிறது.
சிலாங்கூர், Sabak Bernam, மஞ்சள் மண்டலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் Covid-19 கிருமித் தொற்று இல்லாத பகுதியாக அது பச்சை மண்டலப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
ஆயினும் தற்போது அங்கு ஒரு புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Covid-19 பரவல் இன்னும் காணப்படும் நிலையில், நாட்டின் எல்லைப் பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
எனினும், வலுவான காரணங்கள் இருக்கும் மலேசியர்கள் வெளிநாடுகள் செல்ல அனுமதி அளிக்கப்படலாம் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
முக்கியத் தேர்வுகள் எழுத தத்தம் உயர்க்கல்விக் கழகங்களுக்குச் செல்ல வேண்டிய வெளிநாடுகளில் பயிலும் மலேசியர்களும் அடங்குவர் என்றாரவர்.
மற்றொரு நிலவரத்தில், மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உணவகங்கள், உணவுக் கடைகள், பொருட்கள் விற்பனைக் கடைகள் ஆகியவை நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.
நெடுஞ்சாலைகளில் உள்ள R&R பகுதிகள் ஆகியவையும் மீண்டும் திறக்கப்பட அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வியமைச்சு அதனைத் தெரிவித்தது.
அதே வேளை, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், தற்போதைக்கு முக்கியத் தேர்வுகள் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களை மட்டுமே அது உட்படுத்தியிருக்கும் என அமைச்சு விளக்கியது.
அரசாங்கத்தின் அறிவிப்பைப் பின்பற்றி LRT, MRT, Monorel ஆகியவற்றில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என Rapid KL கூறியிருக்கிறது.
அரசாங்கம் புதிய அறிவிப்பை வெளியிடும் வரை அது தொடர்ந்து அமலில் இருக்கும்.
இதனிடையே நாளை முதல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தங்களது சேவையைப் பயன்படுத்துவோர் பயணங்களைத் திட்டமிடுவது நல்லது என Rapid KL தெரிவித்துள்ளது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather