← Back to list
யானைக் கொலை : மேலும் பல விவரங்கள்!
Jun 06, 2020
Sarawak, Lubok Antu நாடாளுமன்ற உறுப்பினர் Jugah Muyang, PKR கட்சியில் இருந்து வெளியேறி, Perikatan Nasional அரசாங்கத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறிய Jugah, சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பான GPSசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார்.
தம்முடைய நாடாளுமன்றத் தொகுதி உட்புறப் பகுதியென்பதால் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுவதாக அவர் கூறிக் கொண்டார்.
Perikatan Nasional கூட்டணி அரசை ஆதரிக்கும் MP-களில் சிலர் Pakataan-னுக்குத் திரும்பப் போவதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில், பக்காத்தான் ஆதரவு MP ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்.
Pahang, Chini சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என Pakatan Harapan முடிவெடுத்திருக்கிறது.
நாட்டில் Covid19 பிரச்னை இன்னும் முழுமையாகக் கையாளப்படவில்லை என்பதால் தாங்கள் அம்முடிவுக்கு வந்திருப்பதாக PKR பொதுச் செயலாளர் சொன்னார்.
அவ்விடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 20-ஆம் தேதியும் வாக்களிப்பு ஜூலை நாங்காம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்சமயம் 20 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாகக் கூறி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல், உண்மைக்குப் புறம்பானது என தேசிய புள்ளி விவரத் துறை தெளிவுப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ தரவுத் தகவலின் படி, மார்ச் மாதத்தில் 6 லட்சம் பேராக மட்டுமே அவ்வெண்ணிக்கை இருந்திருக்கிறது.
எனவே, யாரோ வெளியிட்ட தகவலை நம்பி அவற்றை பகிர்வதை பொது மக்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அத்துறை கேட்டுக் கொண்டது.
இந்தியா, கேரளாவில் காட்டு யானை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், காவல் துறைக்கும் வனத் துறைக்கும் புதியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கைதான நபரிடம் துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகளை அவர் ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
யானை உண்டதாகக் கூறப்படும் பழத்தினுள் வெடி மருந்து வைக்கப்பட்டது எப்படி, எங்கு என்பனவும் அவற்றில் அடங்கும்.
பழத்தை உண்டு யானை படுகாயம் அடைந்தது, அப்போதே சந்தேகப் பேர்வழிகளுக்குத் தெரியும் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ரப்பர் தோட்டத்தில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather