← Back to list
மீண்டும் உயர்வு கண்டுள்ளது Covid-19!
Jun 04, 2020
நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 277 புதிய சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Datuk Sri Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
எனினும் அதில் நால்வர் மட்டுமே உள்நாட்டவர்கள் என அவர் சொன்னார்.
புதிய மரண சம்பவம் ஏதும் பதிவாகாத நிலையில், 12ஆவது நாளாக பலி எண்ணிக்கை 115ஆகவே நீடிக்கின்றது.
_______
பொய்ச் செய்தி பரப்புவதன் அபாயம் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக பொய்ச் செய்தி பரப்பியதன் தொடர்பில் ஒரு விசாரணை அறிக்கை கூட திறக்கபடாததை அடுத்து தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yakob தெரிவித்துள்ளார்.
இந்நிலை நீடிக்க வேண்டும் என அவர் பொது மக்களை நினைவுறுத்தினார்.
______
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய சுமார் 10 கட்டுமானத் தளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
288 கட்டுமானத் தளங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுமானத் தளங்கள் SOPக்களைப் பின்பற்றியிருப்பதாக அமைச்சர் சொன்னார்.
_______
பதிவு பெறாத சிறார் கண்காணிப்பு மைய்யங்களைக் கண்காணிப்பது சற்று கடினம்.
எனவே சிறிய அளவிலான சிறார்களைக் கொண்டிருந்தாலும், பதிந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மைய்யங்களை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே பதிவு பெற்ற TASKA மைய்யங்கள், அரசாங்கத்தின் SOPக்களை அகப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அதனை சரி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
________
மாநிலம் கடந்த தனது ஊழியர்களை 14 நாட்கள் தனைமைபடுத்தி வைப்பது என்ற பெயரில் அவர்களுக்கு கட்டாய சம்பளம் இல்ல விடுமுறை வழங்க நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவின் படி, நாடு கடந்து வந்தவர்கள் தான் கட்டாயம் தனிமைபடுத்தி வைக்கப்பட வேண்டும் என தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yakob தெரிவித்தார்.
அதனை மீறும் நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றாரவர்.
________
14 நாட்களுக்கு தம்மை தாமே தனிமைபடுத்தி வைத்துக் கொண்டிருந்த பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இன்று மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளார்.
_________
பொது பணித் துறை துணை அமைச்சர் Datuk Dr Shahruddin Md Salleh பதவி விலகியுள்ளார்.
தமது பதவி விலகல் இன்று முதல் அமுலுக்கு வருவதாக ஜொகூர், Sri Gading MPயுமான அவர் தெரிவித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather