← Back to list
இரு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும்!
Jun 03, 2020
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு செய்யப்படும்!
எனினும் இப்போதைக்கு பள்ளிகளைத் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Datuk Sri Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார்.
_________
நாட்டில் இன்று மட்டும் 93 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன!
அறுவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டுள்ள வேளை, 61 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிய மரண சம்பவம் ஏதும் பதிவாகாத நிலையில், பலி எண்ணிக்கை 115ஆக நீடிக்கின்றது.
_________
KLலில் சுவாசக் கவசம் வாங்குவதை உட்படுத்திய இணைய மோசடியில் கடந்த ஜனவரி முதல் 2.5 மில்லியன் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது.
அது குறித்து 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக KL காவல் துறை தலைவர் தெரிவித்தார்.
இதில் ஈடுபட்ட 41 பேர் கைதாகி, 23 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
__________
MTUC: Govt's Short-Term Economic Recovery Plan must solve Malaysia’s growing unemployment rate.
அரசாங்கத்தின் குறுகிய கால பொருளாதார மீட்சி திட்டம் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்க வேண்டும் என மலேசிய தொழிற்சங்க காங்கரஸ் வலியுறுத்துகின்றது.
வேலையில்லாத் திண்டாட்டம், ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுவது உள்ளிட்ட விஷியங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அது கூறியது.
கூடிய விரைவில் பிரதமர் அந்த குறுகிய கால பொருளாதார மீட்சி திட்டத்தை அறிவிப்பார் என்றும் அது இம்மாதம் தொடங்கி இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் என்றும் நிதியமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
______
கடைகள் பேரங்காடிகளுக்குச் செல்லும் முன் தங்களது சுய விவரங்களை எழுத விரும்பாதோர் கைப்பேசியில் QR Scanநை பயன்படுத்திக் கொள்ளலாம்!
எனினும் அது கட்டாயம் இல்லை என தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
________
பள்ளிகளைத் திறக்க இன்னும் அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்பதால், ஆசிரியர்களுக்கு எந்த வேலையையும் கல்வி அமைச்சு கொடுக்கவில்லை.
எனினும் சுய வேலை அல்லது தலைமை ஆசிர்யருக்கு உதவும் நோக்கில் ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்றால் அது அமைச்சின் உத்தரவின் பெயரில் அல்ல என தற்காப்பு அமைச்சு தெளிவுபடுத்தினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather