← Back to list
கேரளாவில் கருவுற்ற யானை பலி!
Jun 03, 2020
நோன்புப் பெருநாள் ஒன்றுக்கூடுதல் காரணமாக இருக்கலாம்!
KL Cheras-சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் பதிவாகியுள்ள COVID-19 கிருமித் தொற்றுக்கான புதிய kluster சம்பவம், நோன்புப் பெருநாள் ஒன்றுக்கூடலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்!
அப்புதிய சம்பவத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது என்றாலும், இந்த சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
அக்கிருமித் தொற்றுக்கு ஆளான முதல் நபருடன் தொடர்புடைய குடும்பத்தினர், உறவுக்காரர்கள் என மொத்தம் ஆறு பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் வழக்கமாக ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றாலும், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கான இக்காலக்கட்டத்தில் அதற்கு அனுமதி இல்லை என்றும் Dr Noor Hisham சொன்னார்.
நாட்டில் நேற்று 20 பேர் புதிதாக அத்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்; ஆனால் 66 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
MKN கண்காணிக்கும்!
COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த, அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை எந்தளவுக்கு பின்பற்றுகின்றனர் என்பதை, தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கீழ் உள்ள பணிக்குழு கண்காணிக்கும் என்றும் Dr Noor Hisham Abdullah கூறினார்.
“Kita juga berbincang di mesyuarat MKN supaya satu jawatankuasa yang sedia ada akan melihat kepada kepatuhan pekerja warga asing kepada SOP yang telah dikeluarkan. Pelaksanaan itu yang penting”
மலேசியர்களுடன் ஒப்பிடுகையில், அரசாங்கம் அறிவித்துள்ள SOP-களை அவர்கள் சரிவர பின்பற்றுவதில்லை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக, அவர் சொன்னார்.
சிறார் காப்பங்கள் திறக்கப்படுகின்றன!
நாடு முழுவதும் எஞ்சியுள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான பதிவுப் பெற்ற சிறார் காப்பகங்களை திறக்க அரசாங்கம் அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட காப்பகங்கள், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன், 304 காப்பகங்களுக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கருவுற்ற யானை பலி!
இந்தியா கேரளாவில், பசியால் உணவுத் தேடி, காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்த கருவுற்று யானை ஒன்று, பட்டாசு கலக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்டு பரிதாபமாக மாண்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அப்பட்டாசு வெடித்து வாயில் பலத்த காயமடைந்து, வலியால் துடித்து அங்கிருந்து ஓடிய அந்த யானை பின்னர் ஆற்றுக்குள் இறங்கி, ஏறக்குறைய மூன்று நாட்களாக நீரில் நின்று, பின்னர் மாண்டதாக வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather