← Back to list
CMCOவினால் நல்ல பலனைப் பெற்றோம்!
May 31, 2020
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாட்டிற்கு நல்ல பலனைக் கொண்டு வந்துள்ளது!
நாளுக்கு நாள் Covid-19 தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக் காட்டிய சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் அவ்வாறு சொன்னார்.
அதோடு இது நீடித்தால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவடைந்ததும், சமூக, விளையாட்டு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படலாம் என்றாரவர்.
நாட்டில் நேற்று வெறும் 30 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவான வேளை ஒரு மரண சம்பவம் கூட பதிவாகவில்லை.
__
MW, there are now only five COVID-19 red zones in the country.
நாட்டில் ஒட்டு மொத்தமாக தற்போது வெறும் ஐந்து சிவப்பு மண்டலப் பகுதிகள் மட்டுமே இருக்கின்றன.
KL, Bukit Jalil, Pudu ஆகிய இடங்கள் அதிலடங்கும்.
Bukit Jalilலில் தான் ஆக அதிகமாக 280 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
__
நாளை தொடங்கி இரு வெவ்வேறு மாநிலங்களில் பிரிந்து இருக்கும் கணவன் மற்றும் மனைவி மாநில எல்லையைக் கடக்க அனுமதி வழங்கப்படுகின்றது.
நடப்பில் வேலை மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே மாநில எல்லையைக் கடக்க அனுமதி உண்டு.
__________
அனுமதியின்றி கால்நடையாகவே மாநில எல்லையைக் கடக்க முயன்ற ஜெர்மனிய ஆடவர் ஒருவரை பெர்லிஸ் காவல் துறை கைது செய்துள்ளது.
அந்நபர் Langkawiக்குச் சென்று கொண்டிருந்த வழியில் சாலை தடுப்புச் சோதனையின் போது கைதாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather