← Back to list
தரவுத் தகவல்கள் முறையாக கையாளப்பட வேண்டும்!
May 30, 2020
ஜூன் 9-ஆம் தேதிக்குப் பிறகு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் காட்டுப்பாட்டு ஆணையை முடித்துக் கொள்வதா, இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது.
சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நிய நாட்டுத் தொழிலாளார்கள் ஆவர்.
அண்மைய தினங்களில், 172, 187 என கொரோனா சம்பவங்கள் பதிவாகியப் போதிலும், அதில் சம்பந்தப்பட்டுள்ள மலேசியர்கள் எண்ணிக்கை வெறும் 2 இலக்காக மட்டுமே இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையானது, மலேசியர்கள் அக்கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தர செயல்பாட்டு நடைமுறைகள் SOP-யை பின்பற்றுகின்றனர் என்பதையே காட்டுவதாக Dr Noor Hisham சொன்னார்.
ஆனால், இந்நாட்டிலுள்ள அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் அந்த SOP-யை பின்பற்றுகின்றனரா என்பது தான் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
நேற்று நாட்டில் 103 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, மரணம் எதுவும் இல்லை என்றும் Dr Noor Hisham கூறினார்.
இதனிடையே, மெதுவோட்டம் அல்லது காரோட்டுவது உள்ளிட்ட தனிநபர் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, பொது மக்கள் சுவாசக் கவசம் அணியத் தேவையில்லை.
Dr Noor Hisham Abdullah அவ்வாறு கூறியுள்ளார்.
COVID-19 கிருமித் தொற்று சங்கிலியாக தொடருவதை தடுக்கவே சுவாசக் கவசத்தைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது.
எனவே, ஆளில்லா இடங்களில் மெதுவோட்டத்தில் ஈடுபடும் போதோ அல்லது தனியாக காரோட்டிச் செல்லும் போது அதனை பயன்படுத்த வேண்டியதில்லை என்றாரவர்.
தரவுத் தகவல்கள் முறையாக கையாளப்பட வேண்டும்!
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-க்கான இக்காலக்கட்டத்தில் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வர்த்தக தளங்கள், தனிநபர் தரவுத் தகவல்களை முறையாக கையாள வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன.
வருகையாளர்களின் பெயர், தொடர்பு எண், திகதி மற்றும் நேரம் ஆகிய தகவல்களை மட்டுமே வர்த்தக தளங்கள் பதிவுச் செய்ய வேண்டும்.
அது manual முறை அல்லது மின்னணுப் பதிவாக இருக்கலாம் என, தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு அறிக்கை வழி குறிப்பிட்டிருக்கின்றது.
அத்தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதோடு, அவற்றை CMCO முடிந்ததும், ஆறு மாதங்கள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.
அதிகாரப்பூர்வ தகவலை அமைச்சு வெளியிடும்!
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த அட்டவணை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அது ஒரு பொய்த் தகவல் என கூறிய அமைச்சு, பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகள் அமைச்சின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் என கூறியது.
எனவே, நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather