← Back to list
ATM- வழக்க நிலைக்கு திரும்பியது!
Jun 01, 2020
நாட்டில் கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக பதிவாகி வந்தால், மேலும் அதிகமான தொழில்துறைகளை மீண்டும் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படலாம்!
சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.
அண்மைய நோன்புப் பெருநாளுக்கு பிறகும் கூட நாட்டில் இக்கிருமித் தொற்று சம்பவங்கள் திடீரென அதிகரிக்காமல் இருப்பது நல்ல அறிகுறி என்றும் அவர் சொன்னார்.
மலேசியர்கள், அக்கிருமித் தொற்றுக்கு எதிராக அரசாங்கம் வழங்கியுள்ள ஆலோசனைகளை சரியாக பின்பற்றுகின்றனர் என்பதையே, இது காட்டுவதாகவும் Dr Noor Hisham கூறினார்.
COVID-19 கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள், ஆனால் அறிகுறிகள் காட்டாதவர்கள், மற்றவர்களுக்கு அக்கிருமித் தொற்றைப் பரப்பும் வாய்ப்புகள் இல்லை என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறுகின்றார்.
“Jadi kita kena bezakan yang takde gejala ni…kalua terus takde gejalam takde masalah..sebab mereka tiada kebolehjkangkitan. Tapi kalau mereka mendapat gejala…dua hari sebelum dapat gejala – atau pre-symptomatic – mereka boleh menjangkiti”
அறிகுறிகள் கொண்டுள்ள COVID-19 நோயாளிகள் கூட, முதல் வாரத்தில் தான் அதனை எளிதில் மற்றவர்களுக்கு தொற்றச் செய்யும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் போது அக்கிருமித் தொற்றுக்கான ஆபத்தை வெகுவாக குறைக்கலாம் என்றும் Dr Noor Hisham சொன்னார்.
MKN-னின் SOP-களை மீற வேண்டாம்!
தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிடும் தர செயல்பாட்டு நடைமுறை SOP-க்கு எதிர்மறையாக சொந்த SOP-யை வெளியிட வேண்டாம் என மாநில கால்பந்து சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
கால்பந்து அணிப் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் அம்மன்றம் தான் நிர்ணயிக்கும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறியுள்ளார்.
சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கம், ஜூன் 9ஆம் தேதி தொடங்கி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான SOP-யை பின்பற்றி பயிற்சிகளை தொடக்கவிருப்பதாக கூறி அண்மையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது தொடர்பில் அமைச்சர் பேசினார்.
ATM- வழக்க நிலைக்கு திரும்பியது!
ATM பண பட்டுவாட இயந்திரங்கள் இனி வழக்கம் போல் செயல்படும்.
எனினும், ATM-களில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நிற்கும் போது கட்டாயம் ஒரு மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து, காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே ATM-களை திறந்திருக்க இதற்கு முன் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு!
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஐந்தாம் கட்டமாக, ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இந்தியாவில், ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வேளை, இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக Johns Hopkins பல்கலைக்கழக தரவுத் தகவல் காட்டுகிறது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather