← Back to list
பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்
May 29, 2020
பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும் முன் பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு கூறியிருக்கிறார்.
மாணவர்களின் சுகாதாரத்தைப் பரிசோதிக்க ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்கின்றார்களா உள்ளிட்ட விஷயங்களும் அவற்றில் அடங்கும்.
அதோடு Covid-19 பரவலைத் தடுக்க, அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்ற கல்வியமைச்சு தயாராக உள்ளதா என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், Covid-19 தொற்று இல்லாதது உறுதிப்படுத்தப்பட்ட கள்ளக் குடியேறிகள் விரைந்து அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என Tan Sri Muhyiddin உத்தரவிட்டார்.
குடிநுழைவு தடுப்பு மையங்களில் அக்கிருமித் தொற்று பரவலைத் தடுக்கவே அந்நடவடிக்கையாகும்.
ஜூன் 9 ஆம் தேதிக்குப் பிறகு தடைகளை மேலும் தளர்த்தி, இன்னும் அதிகமான துறைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவதை அரசாங்கம் தீர்மானிக்கும்.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பின் ஏற்படும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அம்முடிவு செய்யப்படும் என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
அதே சமயம் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் மூன்று Covid-19 cluster சம்பவங்கள் தொடர்ந்து ஆக்ககரமாக இருக்கின்றன.
Pudu, Bukit Jalil குடிநுழைவு தடுப்பு மையம், Chow Kit சந்தை ஆகியவையே அம்மூன்று clusterகளாகும்.
நெகிரி செம்பிலானில், எந்த மாவட்டமும் சிவப்பு மண்டலப் பட்டியலில் இல்லை.
இதற்கு முன் அப்பட்டியலில் ஒரே மாவட்டமாக இருந்த Rembau, தற்போது மஞ்சள் மண்டலப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather