← Back to list
தேர்தர் பிரச்சாரங்கள் இருக்குமா இல்லையா?
May 22, 2020
பஹாங், Chini சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வழக்கம் போல் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியுமா இல்லையா என்பது நடப்பு சூழ்நிலையைப் பொருத்தது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தளர்த்தப்பட்டால் மட்டுமே, தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக Malaysiakini தகவல் கூறுகிறது.
பிரச்சாரத்தின் போது அரசாங்கம் நிர்ணயிக்கும் விதிமுறைகளே பின்பற்றப்படும் என அது மேலும் சொன்னது.
Chini சட்டமன்ற உறுப்பினராக இருந்த Abu Bakar Harun அண்மையில் காலமானதை அடுத்து அத்தொகுதியில் ஜூலை 4 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
Covid-19 பரவல் காணப்படும் இக்காலக் கட்டத்தில் நோன்புப் பெருநாளை மிகக் கவனமுடன் கொண்டாடுமாறு முஸ்லீம் அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் ஒன்று கூட அரசாங்கம் தளர்வு வழங்கியிருந்தாலும், பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.
வீடுகளில் இருந்து கொண்டாடுவதே சிறந்தது என பிரதமர் துறையின் சமய விவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம் தர செயல்முறை நடைமுறை SOPயை மீற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தின் எஞ்சிய காலத்தில் ERL ரயில் சேவைகள் மறு அட்டவணையிடப்படவுள்ளன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் அவ்வாறு செய்யப்படுவதாக ERL அறிக்கை வழி தெரிவித்தது.
திரங்கானு, Kemamanனில் வேலை தேடுவதாகக் கூறி மாநில எல்லையைக் கடக்க முயன்ற நான்கு அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் லாரி மூலம் சென்ற போது சாலைத் தடுப்பில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather