← Back to list
ஆலயங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது!
May 21, 2020
நாட்டில் இன்று மேலும் 90 பேர் Covid-19 தொற்றில் இருந்து விடுபட்டு பூரண நலமடைந்துள்ளனர்.
புதிதாக 50 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை அந்நிய நாட்டவர்களை உட்படுத்தியதாகும்.
புதிய மரணம் ஏதும் இல்லை.
மொத்த மரண எண்ணிக்கை 114 ஆகவே உள்ளது.
KL, Bukit Jalil குடிநுழைவுத்துறையின் தடுப்பு மையத்தில் புதிய cluster Covid-19 சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுகாதாரத் தலைமை இயக்குனர் அவ்விவரத்தை வெளியிட்டார்.
நாடு முழுவதும் ஜூன் பத்தாம் தேதியில் இருந்து முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
எனினும் Covid-19 சம்பவங்கள் இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தளங்களை மட்டுமே திறக்க முடியும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அதே சமயம் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறையைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றாரவர்.
“Tak boleh lebih 30 orang, bergantung kepada saiz rumah ibadat tersebut. Penganut berumur 70 ke atas dan kanak kanak dibawah umur 12 tidak dibenarkan hadir. Saringan suhu badan, penyediaan hand sanitizer, pemakaian topeng muka juga perlu dipatuhi setiap masa.”
வயதானவர்களும் சிறார்களும் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்ல அனுமதியில்லை.
இன்று தொடங்கி அனுமதியில்லாமல் மாநிலம் கடக்க முயலும் வாகனமோட்டிகளுக்கு kompaun அபராதம் விதிக்கப்படும்.
அதே சமயம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இனி விண்ணப்பிக்கவும் முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் விடுதிகளில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தி வைப்பதற்கு 50 விழுக்காட்டு கட்டணம் விதிக்கப்படாது.
அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கான பாதி செலவை ஏற்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்வதற்காக சிலாங்கூர், Kajang சந்தை மூடப்பட்டுள்ளது.
அச்சந்தையில் வணிகம் செய்வோருக்கும் தொழிலாளர்களுக்கும் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விட்டதாக Kajang நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
நெகிரி செம்பிலான், Kuala Pialaவில் Covid-19 பீடித்திருந்த வயதான நோயாளி ஒருவரை சுய பாதுகாப்பு அங்கி அணிந்திருந்த மருத்துவப் பணியாளர் சக்கர வண்டியில் தள்ளிச் சென்றதாகக் கூறப்படுவதை மாவட்ட பேரிடர் செயற்குழு மறுத்துள்ளது.
உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather