Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாநிலத்தை கடக்க முயன்றால் நட்டம் உங்களுக்கு தான்!

May 20, 2020


இதுவரை 80.9% குணமடைந்துள்ளனர்!

நாட்டில் இதுவரை ஐயாயிரத்து 646 பேர் COVID19 கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அவ்வெண்ணிக்கை 80.9 விழுக்காடு என துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

இன்னும் ஆயிரத்து 218 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று பதிவான சம்பவங்கள் எண்ணிக்கை 37 என்றும் அவர் சொன்னார்.

அவர்களில் 22 சம்பவங்கள் மலேசியர் அல்லாதோரை உட்படுத்தியிருக்கின்றது.

மற்றொரு நிலவரத்தில், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த COVID-19 சம்பவங்களில் 48 விழுக்காடு, KL Sri Petaling பள்ளிவாசல் சமய நிகழ்வு பங்கேற்பாளர்களை உட்படுத்தியதாகும்.

அந்த Kluster சம்பவம் ஐந்து தலைமுறைகளை உட்படுத்தியது என்றும் Dr Noor Hisham Abdullah கூறினார்.

மன அழுத்தம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து சுகாதார அமைச்சு பொது மக்களிடம் இருந்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான தொலைப்பேசி அழைப்புகளை பெற்றிருக்கிறது.

அவற்றில் 46.8 விழுக்காட்டு அழைப்புகள், மன அழுத்தப் பிரச்னை தொடர்பானவை என Dr Noor Hisham கூறினார்.

பண நெருக்கடி, வருமானம் இல்லாதது, குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஆகியப் பிரச்னைகளை உட்பட்டுத்தி ஏற்பட்ட கவலை மற்றும் ஆத்திரமே, அந்த அழுத்தத்திற்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் சிலர் அதாவது 20 விழுக்காட்டினர், COVID-19 தொடர்பில் தாங்கள் பெற்றுள்ள பொய்யான தகவல்கள் பற்றி அதிகம் நினைத்து கவலைப்படுவதால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக Dr Noor Hisham சொன்னார்.

மாநிலத்தை கடக்க முயன்றால் நட்டம் உங்களுக்கு தான்!

தக்க காரணம் இல்லாமலும், நோன்புப் பெருநாளுக்கு சொந்த ஊருக்கு திரும்புவதாகவும் கூறிக் கொண்டு, வெளி மாநிலத்தவர்கள் யாரும் பினாங்கிற்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம் என மாநில காவல் துறை எச்சரித்துள்ளது.

அவ்வாறு செய்து, கடைசியில் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டால் அது சம்பந்தப்பட்ட வாகனமோட்டிக்கு தான் நட்டம் என பினாங்கு காவல் துறை கூறியுள்ளது.

பினாங்கில், கடந்த திங்கட்கிழமை வரை, கிட்டத்தட்ட 308 வாகனங்கள் திருப்பி அனுப்பட்ட வேளை, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றாதவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டன.

தொகுப்பு : சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather