Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விருந்தினர்களைத் தவிர்க்கவும்!

May 19, 2020


COVID19 கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்கள், வீடுகளில் தொடர்ந்து தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களைச் சந்திப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.

அந்த குறிப்பிட்ட 14 நாட்களுக்கு பிறகு, அவர்கள் விருந்தினர்களைச் சந்திக்கலாம் என்றாலும், கூடல் இடைவெளியை கடைப்பிடிப்பது, சுவாசக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.

கொரோனாப் பரவல் இன்னும் நம்மிடையே இருக்கின்றது; அது இன்னும் முழுமையாக முறியடிக்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் Dr Noor Hisham நினைவுறுத்தினார்.

 இவ்வேளையில், கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய ஆயிரத்து 213 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று 47 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, அவர்களில் 21 பேர் மலேசியர்கள் அல்ல என்றும் Dr Noor Hisham சொன்னார்.

44 பேர் நேற்று முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். 

எல்லைக் கட்டுப்பாடு முக்கியம்!

COVID-19 பரவலை கட்டுப்படுத்த, எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக, வெளிநாடுகளில் இருந்து தொற்றிய கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை Datuk Dr Noor Hisham Abdullah  சுட்டிக் காட்டினார்.

நேற்றுப் பதிவான 47 சம்பவங்களில் ஏறக்குறைய பாதிப் பேர், வெளிநாடுகளில் அத்தொற்றுக்கு ஆளானவர்கள் என அவர் கூறினார்.

இந்த சூழ்நிலை கருதி, வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு திரும்பும் அனைவர் மீதும் கட்டாயப் பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என Dr Noor Hisham சொன்னார்.

அந்நடவடிக்கை நல்ல பலனைக் கொடுத்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நேரத்தை விரயமாக்க வேண்டாம்!

நோன்புப் பெருநாளுக்காக, மாநிலம் விட்டு மாநிலம் பயணித்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதி கிடையாது என ஜொகூர் காவல் துறை கூறியிருக்கின்றது.

அவசர தேவைகளுக்கு மட்டுமே அந்த அனுமதி கொடுக்கப்படும் என மாநில காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக, பொது மக்களிடம் இருந்து நாள்தோறும் தலா ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

போக்குவரத்து அதிகரிப்பு!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக Bukit Aman தெரிவித்தது.

எனினும், நெரிசல் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை என அது கூறியது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்!

வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க அறிவிக்கப்பட்ட சலுகை, டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் FOMCA  கேட்டுக் கொண்டிருக்கிறது.

COVID-19 பரவல் காரணமாக வேலை மற்றும் வருமானம் இழந்து நிற்பவர்கள், புதிய வேலைத் தேட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதை FOMCA   சுட்டிக் காட்டியது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather