← Back to list
CMCO-வை மீறினால், COVID-19 தொற்று அதிகரிக்கலாம்!
May 18, 2020
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வுக்கான அனைத்து தர செயல்பாட்டு நடைமுறைகள் SOP-யையும் பின்பற்றுமாறு, சுகாதார அமைச்சு, பொது மக்களை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது.
சிலர் அதனை மீறி, மாநிலங்களுக்கிடையே பயணிக்க நினைப்பது, நாட்டில் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகி விடலாம் என சுகாதார துறை தலைமை இயக்குநர் கவலை தெரிவித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட SOP-யை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் Datuk Dr Noor Hisham Abdullah எச்சரித்துள்ளார்.
நாட்டில் தக்க காரணமின்றி, மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க முயற்சிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்திருப்பதாக, தற்காப்பு அமைச்சர் வெளியிட்ட தகவலை, Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவ்வாகனங்கள் எண்ணிக்கை 508ஆக இருந்த நிலையில், மறுநாள் ஆயிரத்து 248-ஆக அதிகரித்ததாக Datuk Seri Ismail Sabri Yaakob கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட வாகனங்களை, காவல் துறை, வந்த வழியே திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், மார்ச் 18-ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததில் இருந்து தற்போது வரை, நாட்டில் மூன்றாவது முறையாக கொரோனா கிருமித் தொற்று சம்பவங்கள் எண்ணிக்கை 30-கும் குறைவாக பதிவாகியுள்ளது.
நேற்று 22 பேர் அக்கிருமித் தொற்றுக்கு ஆளானார்கள்; அவர்களில் 9 பேர் அந்நிய நாட்டவர்கள் என Dr Noor Hisham கூறினார்.
இன்னும் ஏறக்குறைய ஆயிரத்து 210 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.
கெடா புதிய MB!
PAS கட்சியின் Muhammad Sanusi Md Nor, kedah மாநிலத்தின் 14ஆவது Menteri Besar-ராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather