Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தேர்வுகளை உட்படுத்திய வகுப்புகளுக்கு முன்னுரிமை!

May 14, 2020


கடைசி நடவடிக்கை!

நாட்டின் எல்லைகளை திறப்பது என்பது கடைசி நடவடிக்கையாக இருக்கும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

உள்நாட்டில் COVID-19 கோறனி நச்சில் தொற்றைக் கட்டுப்படுத்த எல்லைக் கட்டுப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியிருப்பதாக, Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.

தவிர, உலகளாவிய நிலையில் கொரோனா பரவல் நிலவரம் நன்கு கண்காணிக்கப்பட்டு, அதன் பின்னரே எல்லைகளை திறப்பது பற்றி பரிசீலிக்க முடியும் என்றாரவர்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்களில் சில மீது மேற்கொள்ளப்படும் முதல் பரிசோதனையில் அக்கிருமித் தொற்று தென்படுவதில்லை.

ஆனால், 2ஆம் பரிசோதனையில் அவர்களுக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்படும் சூழ்நிலைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

இதன் காரணமாகவே, எல்லைகளை திறப்பது பற்றி அரசாங்கம் யோசிப்பதாக Datuk Dr Noor Hisham சொன்னார். 

இவ்வேளையில்,நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன் முறையாக அமுலுக்கு வந்த காலக்கட்டத்தில் கொரோனா கிருமிப் பரவலுக்கான குறியீடு 3.5 ஆக இருந்தது.

ஆனால், தற்போது அக்குறியீடு 0.3 வரை குறைந்துள்ளது; ஒருவேளை, அக்குறியீடு 1.6 அதாவது எச்சரிக்கை அளவை எட்டினால், நடமாட்டக் கட்டுப்பாடு மீண்டும் அமுலுக்கு வரும் என Dr Noor Hisham கூறினார்.  

ஆக, CMCO-வின் கீழ் வீட்டில் இருந்து வெளியேறவும், வேலைக்குச் செல்லவும் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கொரோனா கிருமித் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவது  மக்களின் நடவடிக்கையைப் பொறுத்தே அமையும் என்றாரவர்.

பள்ளிகள் திறக்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை!

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, சீரான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என கல்வியாளர்களும், நிபுணர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

அதாவது, முறையான கூடல் இடைவெளி இருக்க வேண்டும்;

புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை பகிர்ந்து பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பது, தேசிய ஆசிரியர் பணியாளர் சம்மேளனம் NUTP-யின் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக The Star கூறுகின்றது.

பள்ளி நுழைவாயிலிலும், வகுப்புகளிலும் உடல் வெப்பத்தை கண்காணிக்கும் கருவிகள் வைக்கப்பட வேண்டும் என்றும் சில தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், பள்ளி மீண்டும் தொடங்கினால், பொதுத் தேர்வுகளை உட்படுத்தியிருக்கும் வகுப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என கல்வி 2ஆவது துணை அமைச்சர் கூறியுள்ளார்.

அதன் தொடர்பான எந்த முடிவானாலும், இரு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என அமைச்சு ஏற்கனவே கூறியிருந்தது.

பள்ளிப் பேருந்துகள் பயன்படுத்தலாம்!

CMCO காலக்கட்டத்தில், தொழிற்சாலைகளை பணியாளர்களி வேலைக்கு ஏற்றிச் செல்ல, பள்ளிப் பேருந்துகள் பயன்படுத்தப்படலாம்.

கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி பேருந்து நடத்துநர்களுக்கு உதவ ஏதுவாக இந்த அனுமதி வழங்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார். 

இக்காலக்கட்டத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள புகார் விசாரிக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.

விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

மே ஒன்று மற்றும் 4ஆம் தேதிகளில், KL-லில் இருந்து Tawau-வுக்குப் பயணமான Air Asia விமானப் பயணிகள், 2ஆவது மருத்துவப் பரிசோதனைக்கு முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதன் பயணிகளில் ஆறு பேருக்கு COVID-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக Tawau சுகாதார துறை தெரிவித்தது.

அதிக விலையில் சுவாசக் கவசங்கள்!

சுவாசக் கவசங்களை அதிக விலையில் விற்கும் பேரங்காடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

சில பேரங்காடிகள், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கும் முன், சுவாசக் கவசங்களை அதிக விலையில் வாங்கி அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக எழுந்த புகார் குறித்து அமைச்சு பேசியது.


COVID19 பெருந்தொற்றை அழிக்க முடியாது!

COVID19 பெருந்தொற்றை அடியோடு அழிக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் WHO எச்சரித்துள்ளது.

அந்த வைரஸ் எப்போதும் மறையும் என்பதை கணித்துக் கூறவும் இயலாது;

தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டாலும் அத்தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக தான் இருக்கும் என்றும் WHO தெரிவித்தது.

உதாரணத்திற்கு தட்டம்மை; தடுப்பூசி இருந்தாலும், தட்டம்மையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை அந்நிறுவனம் சுட்டிக் காட்டியது.

புதிய வரலாறு!

பிரதமர் என்ற முறையில், Tan Sri Muhyiddin Yassin ஜொகூர் மாநில சட்டமன்றத்திற்கான தொடக்க அவைக்குச் சென்றதை அடுத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்நாடாளுமன்ற உறுப்பினர் என ஒரே நேரத்தில் இரு பதவிகளை ஏற்றுள்ள முதல் பிரதமர் என்ற பெருமையையும் Tan Sri Muhyiddin பெற்றுள்ளார்.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather