Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மிகக் குறைவான எண்ணிக்கை!

May 12, 2020


Covid-19னில் இருந்து விடுபட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய சம்பவங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. 

110 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

16 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. 

அண்மைய காலமாக மிகக் குறைவாகப் பதிவான எண்ணிக்கை அதுவென  சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார். 

புதிய மரணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. 

அவ்வெண்ணிக்கை 109 ஆகவே இருக்கிறது. 

சிலாங்கூர், Hulu Langat மாவட்டத்தில் உள்ள Ampang, பச்சை மண்டலப் பகுதிகள் பட்டியலில் சேர்ந்துள்ளது. 

அங்கு Covid-19 தொடர்பில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. 

 

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO, மீண்டும் MCOவுக்கு மாறலாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பொதுமக்கள் உரிய வழிகாட்டிகளைப் பின்பற்றவில்லை என்றால் அது சாத்தியம் என தற்காப்பு அமைச்சர் நினைவுறுத்தினார். 

KL மொத்த வியாபாரச் சந்தையிலும் Pusat Bandar Utaraவிலும் கடுமையாக்கப்பட்டிருந்த MCO மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Gombak, Selayang Baruவில் EMCO நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நெடுகிலும் தர செயல்பாட்டு நடைமுறை SOPயைப் பின்பற்றாத வணிகத் தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படாது.

அறிவுரையும் வழங்கப்படாது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

 

MCO மற்றும் CMCOவின் போது தகர்த்தப்பட்ட அங்காடிக் கடைகளின் வணிகர்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படாது எனக் கூறப்படுவது உண்மையில்லை. 

MCO மீட்டுக் கொள்ளப்பட்டதும் அவர்கள் மீண்டும் செயல்படுவதற்கு விண்ணப்பிக்கலாம் என நெகிரி செம்பிலான், சிரம்பான் நகராண்மைக் கழகம் விளக்கியது. 

உங்களுக்குக் கிடைக்கும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.  

 

Covid-19 பரவல் காரணமாக தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ள தங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்குமாறு பினாங்கு சிகை திருத்தும் நிலையங்கள் சங்கம் கூட்டரசு அரசாங்கத்தையும் மாநில அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுவரை தங்களுக்கு உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அச்சங்கம், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் கடைகளைத் திறக்க முடியாமல் சிரமப்படுவதாகக் கூறியது.

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather